சீன அறிவியல் அகாதமி மற்றும் சிங்குவா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், விண்வெளியில் மனித இனப்பெருக்க செல்கள் வளர்ச்சியை ஆய்வு செய்து, பூமியிலிருந்து வேறுபட்ட முடிவுகளை கண்டுள்ளனர்.
செய்தியாளர் - M. மீரா
மனிதர்களால் உண்மையில் விண்வெளியில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது குறித்து சீன விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்துள்ளார்கள்.
விண்வெளியில் மனித இனப்பெருக்க செல்களை வளர்த்து, அவற்றின் வேறுபாடுகளை ஆய்வு செய்வதற்காக, இந்த ஆராய்ச்சியாளர்கள் சீனாவின் (China’s Tianzhou cargo spacecraft) தியான்ஷோ சரக்கு விண்கலத்தை பயன்படுத்தியுள்ளனர்.
சீன அறிவியல் அகாதமியின் ஷாங்காய் தொழில்நுட்ப இயற்பியல் நிறுவனம் ( Chinese Academy of Sciences’ Shanghai Institute of Technical Physics) மற்றும் பெய்ஜிங்கின் சிங்குவா பல்கலைக்கழகத்தைச் (Beijing’s Tsinghua University) சேர்ந்த குழுவினர், ஆரம்பகட்ட மனித இனப்பெருக்க செல்கள் பூமியில் வளர்வது போல விண்வெளியில் சிறப்பாக வளரவில்லை அல்லது வளர்ச்சியடையவில்லை என்று கண்டறிந்துள்ளனர்.
விண்வெளியில், ஆரம்பகால முன்னோடி இனச்செல்களை உருவாக்கும் வெற்றி விகிதம் சுமார் பாதியாகக் குறைகிறது, அதே நேரத்தில் ஆரம்பகால விந்தணுக்களை உற்பத்தி செய்யும் செல்கள் 25 சதவீதத்திற்கும் மேலாக மெதுவாகப் பெருகுகின்றன என்று ஜூலை 15 அன்று 'சயின்ஸ் அட்வான்சஸ்' (Science Advances) இதழில் வெளியிடப்பட்ட அவர்களின் கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன. இதற்கு microgravity மற்றும் அண்டக் கதிர்வீச்சு காரணமாகக் கூறப்படுகிறது.
விண்வெளிச் சூழலில் மனித கரு ஸ்டெம் செல்களை இனச்செல்களாக வெற்றிகரமாக வேறுபடுத்திய உலகின் முதல் ஆய்வு இதுவாகும் என்றும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.