\
Netanyahu Could Be Arrested in New York Over War Crimes, Warns Mamdani
Mamdani & Netanyahuweb

நியூயார்க் வந்தால் போர்க்குற்றவாளி நெதன்யாகு கைது? மம்தானியின் பரபரப்பு எச்சரிக்கை!!

நெதன்யாகு Hague இல் இருக்க வேண்டியவர்; போர்க்குற்றவாளி மீது ஐசிசி பிடிவாரண்ட் உள்ளதை மம்தானி சுட்டிக்காட்டியுள்ளார். நியூயார்க் நகருக்கு நெதன்யாகு வருகை தரும்போது அவரைக் கைது செய்வது குறித்து பரிசீலிப்பதாகவும் கூறியுள்ளார்.
Published on

செய்தியாளர் - M. மீரா

நியூயார்க் மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட மம்தானி, அபார வெற்றி பெற்றார். ஜனவரி மாதம் மம்தானி நியூயார்க் மேயராக பதவியேற்று கொண்டார். காசா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையை பலமுறை "இனப்படுகொலை" என்று கூறியுள்ளார். மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற மேயர் தேர்தல் பரப்புரையின்போது, ​​அவர் நியுயார்க்கு உள் நுழைந்தால் நெதன்யாகுவைக் கைது செய்யுமாறு காவல் துறைக்கு உத்தரவிடுவேன் என்று மம்தானி கூறியிருந்தார். அமெரிக்காவில் இஸ்ரேலிய அரசாங்கத்தை விமர்சிக்கும் முக்கிய நபர்களில் மம்தானியும் ஒருவர்.

Mamdani
Mamdani web

'நியூயார்க் டைம்ஸ்' நிறுவனத்தின் 'தி இன்டர்வியூ' (The Interview) என்ற நிகழ்ச்சியின் கலந்துக் கொண்ட மம்தானியிடம் நெதனயாகுவை கைது செய்வதுக் குறித்து கேள்வி எழுப்பிய போது - சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) அமைந்துள்ள நகரமான 'தி ஹேக்'கில் (The Hague) தான் பிரதமர் நெதன்யாகு இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன் .

மேலும் நெதன்யாகு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்ட ஒரு போர்க்குற்றவாளி; கடந்த பல ஆண்டுகளாக அவரது நடவடிக்கைகள் ஏற்படுத்திய விளைவுகளின் காரணமாகவே அவரை போர்க் குற்றவாளி என்று கூறுகிறார்கள் என்றார்.

நாம் பெஞ்சமின் நெதன்யாகுவைப் பற்றிய தனிப்பட்ட மதிப்பீட்டைப் பற்றிப் பேசவில்லை; சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) அவரை கைது செய்வதற்கான பிடிவாரண்டை பிறப்பித்திருப்பது பற்றியே பேசுகிறோம். ஒரு குற்றச்சாட்டாக அதற்குள்ள முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசுவது அவசியம் என்று நான் கருதுகிறேன்.

World Court in The Hague, Netherlands
World Court in The Hague, Netherlandsweb

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81-வது கூட்டத்தொடருக்காக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு 2026 செப்டம்பரில் நியூயார்க் நகருக்கு வருகை தந்தால், அவரைக் கைது செய்வது குறித்துத் தங்கள் நிர்வாகம் இன்னும் பரிசீலித்து வருகிறது

தனது கட்டுப்பாட்டில் உள்ள நியூயார்க் காவல் துறையினரைக் கொண்டு ஒரு வெளிநாட்டுத் தலைவரைக் கைது செய்ய உத்தரவிடும் சட்டப்பூர்வ அதிகாரம் தனக்கு உள்ளதா என்பது குறித்து தனக்கு உறுதியாகத் தெரியவில்லை என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

நியூயார்க் நகரத்தில் உள்ள சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பேன் என்று நான் ஏற்கனவே கூறியுள்ளேன்; ஏனெனில், நகரத்தை வழிநடத்தும் ஒரு தலைவராகச் சட்டத்தைப் பின்பற்றுவது முக்கியம் என்று நான் கருதுகிறேன்; அதன்படியே செயல்படவும் திட்டமிட்டுள்ளேன்

சட்டரீதியாகத் தன்னால் என்ன செய்ய முடியும் என்று கருதுகிறீர்கள் என்று கேட்கப்பட்டபோது, ​​இதுகுறித்த தெளிவைப் பெறுவதற்காக நகரத்தின் சட்டத் துறையைச் சேர்ந்த நிபுணர்களுடன் "தீவிரமான ஆலோசனையில்" ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Benjamin Netanyahu
Benjamin Netanyahuweb

நெதன்யாகுவை கைது செய்ய முடியுமா?

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிடிவாரண்ட் உள்ளவர்களைக் கைது செய்ய நாடுகளைக் கடமைப்படுத்தும் 'ரோம் ஒப்பந்தத்தை' (Rome Statute) அமெரிக்கா இதுவரை அங்கீகரிக்கவில்லை.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிரான தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. சர்வதேச சட்டம் என்று கூறப்படும் ஒன்றின் மூலம்" அந்த நீதிமன்றம் அமெரிக்காவை குறிவைப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள ட்ரம்பின் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, அந்த அமைப்பை கலைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக அண்மையில் உறுதியளித்திருந்தார்.

Rome Statute

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நிறுவிய ஒப்பந்தமே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கான ரோம் சாசனம் (Rome Statute) ஆகும்.

Rome Statute - நான்கு முக்கிய சர்வதேசக் குற்றங்களை வரையறுத்தது: இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்புக் குற்றம்.

Netanyahu Could Be Arrested in New York Over War Crimes, Warns Mamdani
காசா | இறுதிச் சடங்கு கூட்டத்தில் ட்ரோன் தாக்குதல்..14 பேர் உயிரிழப்பு., 20 பேர் காயம்!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com