பிரேசிலியா நகரம்
பிரேசிலியா நகரம் முகநூல்
உலகம்

வெள்ளத்தில் தத்தளிக்கும் பிரேசிலியா நகரம்!

PT WEB

பிரேசில் நாட்டின் மேற்கு நகரமான பிரேசிலியா வெள்ளத்தால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. கடந்த வாரம் முதல் பெய்து வரும் கனமழையால் நகரமே தண்ணீரில் தத்தளித்து வருகிறது. அக்ரே ஆற்றில் இருந்து தண்ணீர் வெளியேறியதால் அப்பகுதி மக்கள் பெரும் பாதிப்பை எதிர்கொள்கின்றனர்.

பிரேசிலியா நகரம் - மழை

11,000 க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். பிரேசிலியா நகரம் வெள்ளத்தில் மிதக்கும் கழுகு பார்வை காட்சி வெளியாகியுள்ளது. பல்வேறு பகுதிகள் தனித்தீவாக காட்சியளிக்கின்றன.

ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் பணிகளில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

வெள்ளம் தொடர்பாக விளக்கமளித்த பிரேசிலியா மேயர், "இதுவரை ஏற்பட்ட வெள்ளங்களில் இரண்டாவது மிகப்பெரிய வெள்ளம் இது" என குறிப்பிட்டார். மக்களை பாதுகாக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.