”நான் மலாலா அல்ல” - இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் காஷ்மீர் பெண் சமூக ஆர்வலர் ஆவேச பேச்சு!

மலாலா யூசுப்சாய் குறித்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பேசியுள்ள காஷ்மீர் பெண் பத்திரிகையாளர் யானா மிரின் பேச்சு, சர்வதேச அரங்கில் அனைவரின் கவனத்தினையும் ஈர்த்துள்ளது.
யானா மிர்
யானா மிர்ஃபேஸ்புக்

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் , சமூக தலைவர்கள் என பலர் கலந்து கொண்ட ”சங்கல்ப் திவாஸ்” என்ற நிகழ்ச்சி சமீபத்தில் நிகழ்ந்தது. இதில் காஷ்மீர் பெண் பத்திரிகையாளரும், சமூக ஆர்வலருமான யானா மிர் கலந்துகொண்டார். இந்நிலையில், அங்கு அவர் பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் அனைவரின் கவனத்தினை பெற்றுள்ளது.

பாகிஸ்தானில் பெண் கல்விக்கான கட்டுப்பாடுகளை எதிர்த்ததற்காக 2012-ஆம் ஆண்டு தலிபான்களால் சுடப்பட்டவரும், இளம் வயதிலேயே அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற புகழ்ப்பெற்ற கல்வி ஆர்வலரான மலாலா யூசுப்சாய் குறித்துதான் யானா மிர் அந்த காணொளியில் பேசியுள்ளார்.

அதில் ” நான் மலாலா யூசுப்சாய் அல்ல. ஏனெனில் நான் என் தாயகமான இந்தியாவின் ஒரு பகுதியான காஷ்மீரில் சுதந்திரமாகவும் , பாதுகாப்பாகவும் இருக்கிறேன். ஒருபோதும் ஓடிப்போய் உங்கள் நாட்டில் அடைக்கலமும் தேட மாட்டேன். ஆகவே நான் மலாலா யூசுப்சாய் ஆக முடியாது. முன்னேறி கொண்டிருக்கும் என் தாயகத்தினை ஒடுக்கப்பட்டதாக கூறும் மலாலாவின் கருத்துகளை நான் முற்றிலும் எதிர்க்கிறேன்.

சமூக ஊடகங்களில் மூலம் பரவும் இது போன்ற கருத்துகளை நான் முற்றிலும் எதிர்க்கிறேன். அதனை பரப்புகிறவர்கள் எங்கள் நாட்டிற்கு வருவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் அடக்குமுறை குறித்தான கட்டுக்கதைகளை மட்டும் உருவாக்குகிறீர்கள். எனவே இந்தியாவை மதத்தின் அடிப்படையிலே பிரித்து பிரிவினையை ஏற்படுத்தாதீர்கள்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் இங்கிலாந்து , பாகிஸ்தானின் உள்ள அதவாது எங்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் சர்வதேச மனித உரிமை மன்றங்களில் எங்களின் நாட்டை இழிவுப்படுத்துவதை நிறுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.

எனவே இங்கிலாந்தில் அமர்ந்து கொண்டு இந்தியாவை பிளவுப்படுத்தும் முயற்சியை நிறுத்துங்கள். பயங்கரவாதம் போன்ற காரணங்களால் எங்களின் தாய்மார்கள் தங்களின் மகன்களை இழந்து ஏற்கெனவே வாடுகிறார்கள். ஆகவே எங்கள் காஷ்மீரை நிம்மதியாக வாழவிடுங்கள்” என்று தெரிவித்துள்ளார். இவரின் அனல்பறக்கும் பேச்சு பலரின் கவனத்தினை பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com