மத்திய ஆப்பிரிக்காவில் வசிக்கும் அகா பழங்குடியின மக்கள், உலகிலேயே சிறந்த தந்தையர்களாக அறியப்படுகின்றனர். இந்த சமூகத்தை சேர்ந்த ஆண்கள், தங்கள் குழந்தைகளுடன் நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 47% நேரத்தைச் செலவிடுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடும் தந்தைகள் அதிகம் உள்ள சமூகமாக அகா பழங்குடியின சமூகம் உள்ளது. இந்த சமூகத்தில், பாலினப் பாகுபாடு இல்லாமல், ஆண்களும் பெண்களும் சமமாக குழந்தைகளை கவனித்துக் கொள்வது வழக்கம். குழந்தை பசியால் அழும் போது, தாய் இல்லாத நேரத்தில், தந்தைகள் குழந்தைகளை சமாதானப்படுத்துவதற்காக தங்கள் மார்பகங்களைக் கொடுப்பது இவர்களின் தனித்துவமான பழக்கம்.
இந்த அன்பும், சமத்துவமும் அகா சமூகத்தின் தந்தை - குழந்தை உறவை மிகவும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளன.