சார்லஸ் முங்கர் - வாரன் பஃபெட்
சார்லஸ் முங்கர் - வாரன் பஃபெட் ட்விட்டர்
உலகம்

வழிகாட்டிய தோழன்! வாரன் பஃபெட்டின் நண்பர் சார்லஸ் முங்கர் மறைவு- 50 ஆண்டு நட்பு சாத்தியமானது எப்படி?

Prakash J

நட்பு என்பது யாது?

உலகில் வாழும் மனிதர்களுக்கு நட்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். எந்தவோர் எதிர்பார்ப்பும் இல்லாமல் கருத்துகளையும் உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ளும் ஓர் உன்னத உறவே நட்பு. இன்னும் சொல்லப்போனால், ஒருவனை நல்வழிப்படுத்துவதற்கும் தவறிழைக்கும் போது திருத்துவதற்கும் நட்பு அவசியமாகின்றது கஷ்டத்தில் இருக்கும்போது உறவினர்களிடம் கேட்க முடியாத உதவிகளைக்கூட, நண்பர்களிடம் கேட்டுப் பெறுவதே உண்மையான நட்பாகும். பலருடைய வாழ்க்கையிலும் நட்பு என்பது, தண்டவாளமாய் இறுதிவரை தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு மனிதருக்கும் அவருடைய வாழ்க்கையில் நம்பகமான ஆலோசகர் தேவைப்படுகிறார். அதற்கும் நட்பு முக்கியமாகும். அப்படியான நட்புக்கு அந்தக் காலம்தொட்டே பலர் உதாரணமாகச் சொல்லப்படுகின்றனர். அவ்வையார் - அதியமான், கபிலர் - பாரி, கொப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் ஆகியோரது நட்பை இன்றும் பலரும் உதாரணமாகக் கூறுகின்றனர்.

அவ்வையார் - அதியமான், கபிலர் - பாரி, கொப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் ஆகியோரது நட்பை இன்றும் பலரும் உதாரணமாகக் கூறுகின்றனர்.

இதையும் படிக்க: ”ஒழுக்கம், கடின உழைப்பு.. அதோடு விஸ்வாசமும் ரொம்ப முக்கியம்”-கேப்டன் பொறுப்பு குறித்து சுப்மன் கில்!

50 ஆண்டுகளாகத் தொடரும் நட்பு

அந்த வகையில் தற்போது பெரும் பணக்காரர்களான வாரன் பஃபெட்டின் - சார்லஸ் முங்கர் ஆகியோரின் நட்பும் பேசப்பட்டு வருகிறது. இவர்களது நட்பும் 50 ஆண்டுகளாகத் தொடர்ந்துவந்த நிலையில்தான், சார்லஸ் முங்கர் தன்னுடைய 99வது வயதில் இவ்வுலகைவிட்டுச் சென்றுள்ளார். உண்மையில், வாரன் பஃபெட்டின் நம்பிக்கைக்குரிய நபர் ஒருவர் இருந்தார் என்றால் அது சார்லி முங்கர்தான்.

அதனால்தான் அவர் இறந்தது குறித்து அதிக வேதனை தெரிவித்துள்ளார். ”சார்லி முங்கர் அவர் வசித்த கலிபோர்னியாவில் உள்ள மருத்துவமனையில் நிம்மதியாக இறந்தார். முதலீட்டாளர்கள் குழுமத்தின் நல்வாழ்வு இருந்தபோதிலும் அதை நிரப்ப முடியாது’’ என்றும் பஃபெட் உருக்கமாக கூறியுள்ளார். அவருடைய மறைவு, வாரன் பஃபெட்டிற்கு ஒரு வெற்றிடமாகவே பார்க்கப்படுகிறது. முங்கர் ஜனவரி 1 அன்று வரை இருந்திருந்தால் 100 வயதை எட்டியிருப்பார் என்பது வியப்பான செய்தியாக இருந்தாலும், அவரது இழப்பு என்பது பஃபெட்டிற்கு சோகமான செய்தியாகவே பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: உலகின் ஏழை நாடுகள் பட்டியல்: முதலிடத்தில் புருண்டி நாடு.. 2வது இடத்தில் ஆப்கானிஸ்தான்!

வாரன் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்த சார்லஸ் முங்கரின் ஆலோசனை!

ஏன், இவர்களுடைய நட்பு பெரிதாகப் பார்க்கப்படுகிறது, அவர்களுக்குள் நட்பு உருவானது எப்படி, இத்தனை ஆண்டுகள் கடந்தும் அவர்களது நட்பு தொடர்ந்ததற்குக் காரணம் என்ன.. என நெட்டிசன்கள் எழுப்பும் கேள்விகளுக்கும் ஒரே பதிலாக இருப்பது, வாரன் பஃபெட்டிற்கு சார்லஸ் முங்கர் உரைத்த நம்பிக்கை வரிகள்தான். 1950இல் பல ஆண்டுகளாகத் திவாலாகக்கூடிய நிலையில் இருந்த நிறுவனங்களிடம், ’சிறு முதலீடு கொடுத்தால் மீண்டுவர முடியும்’ என்ற நம்பிக்கையை அளித்த வாரன் பஃபெட், அவற்றை துறைவாரியாக அதிகளவில் கைப்பற்றி, கட்டமைத்ததுடன், தனது வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தையும் உருவாக்கினார். இதை, Buying cigar butts என்று வாரன் பஃபெட் அழைப்பது உண்டு.

அந்த சமயத்தில் வாரன் பஃபெட்டைத் தொடர்புகொண்ட சார்லஸ் முங்கர், “நீ பெரிய மற்றும் நிலையான நிறுவனத்தை உருவாக்க வேண்டுமெனில், பிற முதலீட்டாளர்களை முந்தி, அதிக லாபத்தைப் பெற வேண்டுமெனில் பெரிய மற்றும் வலிமையான பிராண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும்” என ஆலோசனை வழங்கினார்.

நீ பெரிய மற்றும் நிலையான நிறுவனத்தை உருவாக்க வேண்டுமெனில், பிற முதலீட்டாளர்களை முந்தி, அதிக லாபத்தைப் பெற வேண்டுமெனில் பெரிய மற்றும் வலிமையான பிராண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும்

அந்த ஆலோசனைதான் அவருடைய நட்பில் மட்டுமல்ல, வளர்ச்சியிலும் இணைத்தது. இதன்பின் சார்லஸ் முங்கர், வாரன் பஃபெட்டுடன் முதலீட்டுக்கான ப்ளூ பிரின்ட் வழங்கி அவரை உயர்த்தவும் செய்தார். ’சரியான வணிகத்தை வியத்தகு விலையில் வாங்குவதைக் காட்டிலும். வியத்தகு வர்த்தகத்தைச் சரியான விலையில் வாங்குவது’ என்ற எளிய முதலீட்டு ஆலோசனையை வாரனுக்கு வழங்கி, அவரை முன்னுக்குக் கொண்டுவந்தார். இதனால்தான் அவர்களுடைய நட்பு இன்றுவரை தொடர்கிறது.

இதையும் படிக்க: ”நான் இருக்கிற வரை ஆட்டம் முடியாது” - தனியொருவனாக இந்திய அணியின் வெற்றியை தட்டிப்பறித்த மேக்ஸ்வெல்!

சார்லஸ் முங்கர் கற்றுக்கொடுத்த பாடங்கள்

வணிகத்தில் தன்னைவிட மூத்தவரான சார்லஸ் முங்கரிடம், வாரன் பஃபெட் கற்றுக்கொண்ட பாடங்கள் அதிகம் எனக் கூறப்படுகிறது. அதைத்தான் அவர், இன்றும் கடைப்பிடித்து வருகிறார். ”சார்லியிடம் நான் தொலைபேசியில் பேச ஆரம்பித்தால், ஏதாவது ஒன்றைப் புதிதாகக் கற்றுக்கொள்ளாமல் நாங்கள் தொலைபேசியை வைப்பதில்லை” எனச் சொல்லும் வாரன், ”முங்கரும் நானும் பொங்கிவரும் நுரையின்மீது கவனம் செலுத்தவில்லை. காரணம், நுரைவெடித்து காணாமல் போய்விடும்” என்கிறார்.

சார்லியிடம் நான் தொலைபேசியில் பேச ஆரம்பித்தால், ஏதாவது ஒன்றைப் புதிதாகக் கற்றுக்கொள்ளாமல் நாங்கள் தொலைபேசியை வைப்பதில்லை

இப்போது அவருடைய நுரை ஒன்று வெடித்திருப்பதுதான் அவருடைய நுரையீரலுக்கே அழுத்தம் கூடியிருக்கிறது. அந்த துக்கத்தில் அவர்களுடைய நட்பு இணையத்தில் வைரலாகி வருகிறது. “இறந்தவர்கள் உங்களுக்குப் பிடித்தவர்களாகவோ, பிடிக்காதவர்களாகவோ இருக்கலாம். ஆனால், அவர்களிடம் இருந்து நீங்கள் கற்றுக்கொள்வதற்கு நிறையவே விஷயங்கள் இருக்கின்றன” என வாரனுக்கு சார்லஸ் முங்கர் கூறிய வரிகள்தான், இன்றும், இந்த துக்கத்திலும் அவரைக் கரைசேர்த்துக் கொண்டிருக்கின்றன.

இதையும் படிக்க: பிறப்பு விகிதத்தை அதிகரிக்க புதிய முயற்சி: ஜோடிகளை நிறுத்தி தேர்ந்தெடுக்க களம் அமைத்த தென்கொரியா