அகிரா டோரியாமா
அகிரா டோரியாமா PT
உலகம்

Dragon Ball தொடரை உருவாக்கிய அகிரா டோரியாமா காலமானார்

Jayashree A

உலகப் புகழ்பெற்ற ஜப்பானின் காமிக்ஸ் மற்றும் அனிமி தொடரான டிராகன் பால் இசட் (Dragon Ball Z), டிராகன் பால் சூப்பர் (Dragon Ball super) மற்றும் சாண்ட் லேண்ட் (Sand Land) ஆகியவற்றை உருவாக்கிய அகிரா டோரியாமா நேற்று (மார்ச் 8) காலமானார். அவருக்கு வயது 68.

அவர் subdural hematoma (தலைக்காயம்) காரணமாக இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்தி, அகிராவின் ரசிகர்களையும் Anime ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுதொடர்பாக டிராகன் பால் தன் X தள இணையதளத்தில் “அவர் இருந்திருந்தால் மேலும் பல உன்னத படைப்புகளை படைப்பதுடன் இன்னும் பல சாதனைகளையும் செய்திருப்பார். நம்மைவிட்டு அவர் மறைந்தபோதும், என்றென்றும் அழியாத பல பட்டங்களையும் கலைபடைப்புகளையும் இந்த உலகிற்கு விட்டுச் சென்றுள்ளார். உலகெங்கிலும் பலரின் ஆதரவு அவருக்கு இருக்கிறது. அதன் காரணமாகத்தான் அவரால் 45 ஆண்டுகளுக்கும் மேலாக படைப்புலகில் சாதிக்க முடிந்தது.

உலகம் உள்ளவரை அவரின் படைப்பானது அனைவராலும் விரும்பப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். எப்பொழுதும் போல் உங்கள் புரிதலுக்கும் ஆதரவிற்கும் நாங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.