சர்வதேச நிதியம், பாகிஸ்தான் எக்ஸ் தளம்
உலகம்

மீண்டும் நிதி நெருக்கடியில் பாகிஸ்தான்..!

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத நிலைகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து வங்கிகள் தங்களின் சைபர் பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்தியுள்ளன.

கௌசல்யா

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத நிலைகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து வங்கிகள் தங்களின் சைபர் பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்தியுள்ளன. எதிர் தாக்குதலுக்கான அச்சுறுத்தல்கள் காரணமாக எல்லைப் பகுதிகளுக்கு அருகிலுள்ள வங்கிக் கிளைகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எந்தவொரு சைபர் தாக்குதலையும் தடுக்க 24 மணி நேர போர் அறையை உருவாக்கியுள்ளதாக பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைமை செயல் அதிகாரி அஷோக் சந்த்ரா தெரிவித்துள்ளார். சைபர் தாக்குதல் ஏற்படுவதற்கான எந்தவொரு சாத்தியக்கூறையும் தடுக்கும் வகையில், தொழில்நுட்பங்களை ஏற்படுத்தியுள்ளதாக மற்றொரு பொதுத் துறை வங்கி அதிகாரி கூறியுள்ளார். வாடிக்கையாளர்கள் சிரமத்தை சந்திக்காத வகையில், வங்கிகளில் நிதி இருப்பதாகவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான்

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்திய பங்குச்சந்தைகளில் ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து காணப்படுகின்றன. பங்குச்சந்தைகள் சரிவுடன் காணப்பட்டாலும் இத்துறை பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகின்றன. குறிப்பாக, பொதுத் துறையைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல் நிறுவனப் பங்குகள் 4 சதவீதம் வரை உயர்ந்து காணப்படுகிறது. பாரத் டைனமிக்ஸ் நிறுவனப் பங்குகள் 10 சதவீதம் வரையிலும், பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன பங்குகள் 5 சதவீதம் வரையிலும் உயர்ந்து காணப்படுகின்றன. குறிப்பாக, ட்ரோன் உற்பத்தி நிறுவனமான ஐடியாஃபோர்ஜ் டெக்னாலஜி நிறுவன பங்குகள் 18 சதவீதம் ஏற்றத்துடனும், துரோனாசார்யா ஏரியல் இன்னோவேஷன்ஸ் நிறுவனம் 5 சதவீதமும் ஏற்றத்துடன் வர்த்தகமாகின.

வான் எல்லையை மூடியதால், ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பு மேலும் குறைந்திருக்கிறது. நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் நிம்மதி பெருமூச்சுவிட சர்வதேச நிதியம் நிதியுதவி வழங்கி வருகிறது. சென்ற மார்ச் மாதத்தில் கூட சர்வதேச நிதியம் 2 பில்லியன் டாலர்களை அந்நாட்டிற்கு வழங்கியது. இந்தச்சூழலில், பஹல்காம் தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீர் நிறுத்தம், இறக்குமதிக்கு தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை இந்தியா விதித்தது. இதற்கு எதிர்வினையாற்றுவதாக நினைத்துக்கொண்டு பாகிஸ்தான் தன் வான் எல்லையை மூடியதாக அறிவித்தது. இது, இந்திய விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் சுற்றிச்செல்லும் நிலையை ஏற்படுத்தினாலும், பாகிஸ்தானுக்கும் வான் எல்லைப் பகிர்வு கட்டணத்தை வசூலிக்க முடியாமல் போகும் சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.

imf

பாகிஸ்தான் வான் எல்லையை இந்திய விமானங்கள் பயன்படுத்த முடியவில்லை என்றாலும், மற்ற பல நாடுகளின் விமான நிறுவனங்களும் அந்நாட்டின் வான் எல்லையை கடந்துசெல்ல விரும்பவில்லை எனத் தெரிகிறது. புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்த 2019ஆம் ஆண்டில் கூட பாகிஸ்தான் தன் வான் எல்லையை மூடுவதாக அறிவித்தபோது அந்நாட்டிற்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு ஏற்பட்டது. இந்நிலையில், மீண்டும் தன் வான் எல்லையை பாகிஸ்தான் மூடியதால் வான் எல்லைப் பகிர்வு கட்டண வருவாய் இழப்பு கூடுதலாகவே இருக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது, விமான போக்குவரத்து நிறுவனங்கள் வழங்கிவந்த வான் பகிர்வு கட்டணம் பாகிஸ்தானுக்கு கிடைக்காமல் போகும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதுவும், அந்நாட்டின் அந்நிய செலாவணி வேகமாக குறையும் சூழலை உருவாக்கியிருக்கிறது.