6 போர் கப்பல்கள்
6 போர் கப்பல்கள் முகநூல்
உலகம்

மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்பப்பட்ட சீனாவின் 6 போர் கப்பல்கள்

ஜெனிட்டா ரோஸ்லின்

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையில் போர்நடந்து வரும் நிலையில் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் (PLA) தனது 6 போர் கப்பல்களை மத்திய தரைக்கடல் பகுதியில் அனுப்பியுள்ளது.

அமெரிக்காவின் ஒரு விமானம் தங்கி போர் கப்பல் உட்பட அமெரிக்க கடற்படை துருப்புகள் ஏற்கனவே மத்திய தரை கடலில் சைப்பிரஸ் ஒட்டியுள்ள பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாக சீனா தனது 6 போர்க்கப்பல்களை மத்திய தரைக் கடல் பிராந்தியத்திற்கு அனுப்பியுள்ளதாக சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இது சமீபத்தில் ஓமானுடன் கூட்டு இரணுவப் பயிற்சியில் பங்கேற்ற சினாவின் மக்கள் விடுதலை இராணுவம்(PLA)இன் 44 வது கடற்படை துணைப் பணிக்குழுவின் ஒரு பகுதியாகும்.

இந்த போர்கப்பல்களை அனுப்பும் நடவடிக்கையானது அமெரிக்கா தனது போர் கப்பலை அனுப்பியதை அடுத்து சீனாவும் தனது போர் கப்பல்களை நிறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

ஓமன் பயணத்தை வெற்றிகரமாக முடித்ததைத் தொடர்ந்து, சீன கடற்படை துணைப் பணிக்குழு அக்டோபர் 18 காலை திட்டமிட்டபடி குவைத்தில் உள்ள ஷுவைக் துறைமுகத்தை வந்தடைந்தது.

இது குறித்து சீன பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிக்கையில், “குவைத் கடற்படை ரோந்துக் கப்பலான ஃபைலாகாவின் வழிகாட்டுதலுடன், சீனப்படையின் போர்க்கப்பல்களான ஜிபோ, கப்பல் ஜிங்ஜோ மற்றும் கியாண்டாவோஹு ஆகிய கப்பல்கள் குவைத்தின் ஷுவைக் துறைமுகத்தில் காலை 9:00 மணியளவில் நிறுத்தப்பட்டன. குவைத் ராணுவப் பிரதிநிதிகள், குவைத்தில் உள்ள சீனத் தூதரக ஊழியர்கள் மற்றும் வெளிநாட்டு சீனர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் அவர்களை வரவேற்றனர்” என்று தெரித்துள்ளது.