வெளியேறுங்கள்
வெளியேறுங்கள்முகநூல்

"எகிப்து, ஜோர்டானில் இருந்து உடனே வெளியேறுங்க!" - இஸ்ரேல் மக்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை

எகிப்து, ஜோர்டான் நாடுகளில் வசிக்கும் இஸ்ரேலிய குடிமக்களை உடனடியாக அப்பகுதிகளை விட்டு வெளியேறும் படி இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

எகிப்து, ஜோர்டான் போன்ற பகுதிகளில் வசிக்கும் இஸ்ரேலிய குடிமக்களை உடனடியாக அப்பகுதிகளை விட்டு வெளியேறும் படி இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் போராளிகள் காசா பகுதியிலிருந்து இஸ்ரேலுக்குள் நுழைந்து, 200க்கும் மேற்பட்ட பணயக்கைதிகளை பிடித்து 1,400 பேரைக் கொன்றதை விளைவாக இப்போரானது தீவிர நிலையை அடந்தது.

இஸ்ரேல் பாலஸ்தீன போர்
இஸ்ரேல் பாலஸ்தீன போர்முகநூல்

14 வது நாளாக தொடர்ந்து அப்பாவி மக்களை பலியாக கொடுத்து கொண்டிருக்கும் இஸ்ரேல் பாலஸ்தீன போரானது பல இழப்புகளையும் பேரழிவுகளையும் தொடர்ந்து நிகழ்த்தியும் இன்றளவும் போரின் வேகம் நின்றபாடில்லை.

வெளியேறுங்கள்
இஸ்ரேல் - ஹமாஸ் போர்: 5,000-ஐ கடந்த பலி எண்ணிக்கை!

ஏட்டிக்கு போட்டியான வான்வழிவ தாக்குதல் என்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் இப்போரின் விளைவாக தற்போது இஸ்ரேல் எகிப்து ஜோர்டானில் வசிக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் அரசாங்கம் வலியுறுத்தி வருகின்றது.

இது குறித்து இஸ்ரேயலின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவிக்கையில், “ எகிப்து( சீனாய் உட்பட), ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கு பயணிக்க வேண்டாம். அங்கு தங்கியிருப்பவர்கள் முடிந்த அளவு விரைவாக வெளியேற வேண்டும் ” என்று அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

இந்த தொடர்தாக்குதலின் விளைவாக இதுவரை 4,137 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஹமாஸின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com