40 நாட்கள் நடைபெற்ற ஈரானுக்கு எதிரான 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' நடவடிக்கையின்போது குறைந்தது 42 அமெரிக்க விமானங்கள் இழப்புகளைச் சந்தித்ததாக் என்று காங்கிரஸின் ஆராய்ச்சி சேவை அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், நிறுத்துவதற்கு பாகிஸ்தான் இருதரப்பிலும் மத்தியஸ்தம் செய்து வருகிறது. எனினும், இவ்விவகாரத்தில் சுமுகம் ஏற்படவில்லை. இதனால் அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்துமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், மத்திய கிழக்கு போர்ப் பதற்றத்திலேயே காணப்படுகிறது. முன்னதாக, 40 நாட்கள் நடைபெற்ற ஈரானுக்கு எதிரான 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' நடவடிக்கையின்போது குறைந்தது 42 அமெரிக்க விமானங்கள் இழப்புகளைச் சந்தித்ததாக் என்று காங்கிரஸின் ஆராய்ச்சி சேவை அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
அணு ஆயுத விவகாரம் தொடர்பாக ஈரானைக் குறிவைத்து பிப்ரவரி 28 அன்று இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' என்ற தாக்குதலைத் தொடங்கியது. இந்த தாக்குதல் ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்றது. அந்தச் சமயத்தில், போர் விமானங்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் உட்பட குறைந்தது 42 அமெரிக்க விமானங்கள் சேதமடைந்ததாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
இதுகுறித்து காங்கிரஸின் ஆராய்ச்சி சேவையின் (CRS) அறிக்கை, ’தொடர்ச்சியான போர் நடவடிக்கைகள் மற்றும் காரணம் கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் சேதமடைந்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. அதன்படி, நான்கு F-15E ஸ்ட்ரைக் ஈகிள் போர் விமானங்கள், ஒரு F-35A லைட்னிங் II போர் விமானம், ஒரு A-10 தண்டர்போல்ட் II தரைத் தாக்குதல் விமானம், ஏழு KC-135 ஸ்ட்ராடோடேங்கர் வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானங்கள், ஒரு E-3 சென்ட்ரி AWACS விமானம், இரண்டு MC-130J கமாண்டோ II சிறப்பு நடவடிக்கை விமானங்கள், ஒரு HH-60W ஜாலி கிரீன் II ஹெலிகாப்டர், 24 MQ-9 ரீப்பர் ட்ரோன்கள் மற்றும் ஒரு MQ-4C டிரைட்டன் ட்ரோன் ஆகியன இழப்பைச் சந்தித்திருப்பதாக அது தெரிவித்துள்ளது.
எனினும், இந்த எண்ணிக்கை மாறக்கூடும் என்றாலும், பழுதுபார்ப்பு மற்றும் மாற்றுச் செலவுகள் இந்த மதிப்பீட்டை 29 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்த உதவியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.