தென் மத்திய ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு, ஆஸ்திரியா. நாட்டின் தலைநகரான வியன்னாவிலிருந்து தென்மேற்கே சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கிராஸ் நகரம், ஆஸ்திரியாவின் இரண்டாவது பெரிய நகரமாகும். இங்கு, 300,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த நிலையில்தான், இங்குள்ள கிராஜ் நகரத்தில் BORG Dreierschützengasse என்ற உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அப்பள்ளியில் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 9 மாணவர்களும் 1 ஆசிரியரும் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த விபத்தை நிகழ்த்தியவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் உடல் பள்ளியின் கழிப்பறையில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் பெயர் மற்றும் பிற விவரங்கள் இன்னும் தெரியவில்லை, ஆனால் தாக்குதல் நடத்தியவர் தனியாகச் செயல்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த தகவலுக்கு போலீசார் பள்ளிக்குச் சென்று மாணவர்களையும் ஆசிரியர்களையும் மீட்டு பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து ஐரோப்பிய ஒன்றிய செய்தித் தொடர்பாளர் பவுலா பின்ஹோ, “பள்ளியில் நடந்த இந்த கொடூரமான சம்பவத்தைத் தொடர்ந்து தெளிவுபெற நாங்கள் துக்கத்தில் ஒன்றாக நிற்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரியாவில் கடுமையான துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் உள்ளன. நாட்டில் துப்பாக்கி உரிமை ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. மேலும் துப்பாக்கியைப் பெற உரிமம் தேவை. தனிநபர்கள் அதற்கான உடற்பயிற்சி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும், துப்பாக்கி பாதுகாப்பு படிப்புகள் மூலம் திறனை நிரூபிக்க வேண்டும் மற்றும் ஆயுதங்களுக்கான பாதுகாப்பான சேமிப்பைக் காட்ட வேண்டும். மேலும், சிறார்கள் துப்பாக்கி வைத்திருக்க அனுமதி இல்லை, ஐரோப்பியர் அல்லாத குடியிருப்பாளர்கள் ஆஸ்திரியாவிற்குள் துப்பாக்கிகளை கொண்டு வர சிறப்பு அனுமதி தேவை. இருப்பினும், ஐரோப்பாவில் அதிக ஆயுதம் ஏந்திய பொதுமக்கள் வாழும் நாடுகளில் ஆஸ்திரியாவும் ஒன்று. இங்கு 100 பேருக்கு 30 துப்பாக்கிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அந்த வகையில், துப்பாக்கியுடன் நுழைந்த நபர் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.