பொதுவாக, பெண்களுக்கு மாதவிடாய் நிறுத்தத்திற்கு முன்பே ஈஸ்ட்ரோஜன் அளவுகள் குறையத் தொடங்கும். மாதவிடாய் நிறுத்தத்திற்கு முன்பு பெண்களுக்கு இதய உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.. ஆனால் மெனோபாஸ் அதாவது மாதவிடாய் நிறுத்தம் நெருங்கும்போது, அவர்களின் ஆபத்தும் அதிகரிக்கிறது. அது குறித்து அமெரிக்க ஆய்விதழில் சில தகவல்கள் வெளிவந்தது.. அது என்னென்ன? என்று இந்த பதிவிக் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..
பெண்களுக்கு மெனோபாஸ் என்பது ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சி முடிவடையும் இயற்கை நிகழ்வு. இது இனப்பெருக்க ஆண்டுகளின் முடிவைக் குறிக்கிறது. பொதுவாக 45 முதல் 55 வயதுக்குள் ஏற்படுகிறது. மெனோபாஸின் போது, கருப்பைகள் முட்டைகளை உற்பத்தி செய்வதை நிறுத்துகின்றன.
தூங்குவதில் சிரமம் அல்லது தூக்கத்தின் போது அடிக்கடி விழிப்பு ஏற்படுவது. யோனியில் வறட்சி மற்றும் எரிச்சல் ஏற்படுவது. மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற மனநிலை மாற்றங்கள் ஏற்படுவது. தாம்பத்தியத்தில் ஆர்வம் குறைவது ஆகியவையாகும்.
பெண்களுக்கு மாதவிடாய் நிறுத்த காலகட்டத்தில் ஏற்படும் inflammation வெறும் அசௌகரியங்களை மட்டும் தராமல், இதய நோய்க்கான ஆபத்தையும் கணிசமாக அதிகரிக்கிறது என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான ஆய்வு JCEM ((the journal of clinical endocrinology and metabolism)) என்ற அமெரிக்க ஆய்விதழில் வெளிவந்துள்ளது. அதில், இதுவரையில் மெனோபஸ் என்பது ஹார்மன் மாற்றமாகவே அணுகப்பட்டு வந்துள்ளது.
ஆனால், மாதவிடாய் நிறுத்தம் பெண்களின் உடலில் inflammation எனப்படும் அழற்சியைத் தூண்டலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மெனோபஸ் காலகட்டத்தில் பெண்களின் உடலில் இந்த அழற்சி வெவ்வேறு வழிகளில் வெளிப்படலாம். மூட்டு வலி, கவனம் சிதறுதல், மறதி, சிந்தனையில் தெளிவின்மை போன்றவை inflammation உடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
மெனோபாஸுக்குப் பிறகு பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைவதால், இதயத்தைப் பாதுகாக்கும் தன்மை குறைகிறது. இந்நிலையில், inflammation இதய நோய் அபாயத்தை மேலும் அதிகரிக்கக்கூடும். இந்த ஆபத்திலிருந்து தப்பிக்க, 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், தங்கள் உடல் எடை, இரத்த அழுத்தம், சர்க்கரை அளவை முறையாக பராமரிக்க வேண்டும். உணவில் கவனம் செலுத்தி வயிற்று ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.