வீடியோ ஸ்டோரி

பெட்ரோல் விலை உயர்வு : கழுதை மீது அமர்ந்து தினமும் வேலைக்குச் செல்லும் கட்டிடத் தொழிலாளி

EllusamyKarthik

பெட்ரோல் விலை உயர்வு காரணமாக, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி ஒருவர் தினந்தோறும் கழுதை மீது அமர்ந்து வேலைக்குச் செல்கிறார்.

தர்மாவரம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ண மோகன் என்பவர், தனது வீட்டில் கழுதைகளை வளர்த்து வருகிறார். தினந்தோறும் இருசக்கர வாகனங்களில் வேலைக்குச் சென்று வந்த கிருஷ்ண மோகன், தற்போது தான் வளர்த்து வரும் கழுதையில் பணிக்குச் செல்கிறார்.

பெட்ரோல் விலை நூறு ரூபாயை கடந்ததால், இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போடும் அளவுக்கு பணம் இல்லாததால், கழுதையில் செல்வதாக கிருஷ்ண மோகன் தெரிவித்துள்ளார்.

பணி முடியும் வரை, கழுதையை மேய்ச்சலுக்கு அனுப்பிவிட்டு, மீண்டும் மாலையில் கழுதையிலேயே வீட்டிற்குச் சென்று விடுவதாகத் தெரிவிக்கிறார்.