டிரெண்டிங்

மலைப்பகுதியில் சுற்றித்திரிந்த நீலகிரி மரநாய் - வைரல் வீடியோ

Sinekadhara

நீலகிரி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அரிதான காணப்படும் விலங்கு வகைகளில் ஒன்று மரநாய். தென்னிந்தியாவை பூர்வீகமாகக்கொண்ட இந்த நீலகிரி மரநாய், கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள புல்வெகள் மற்றும் மலைப்பகுதிகளில் வாழ்கிறது. இது பறவைகள் மற்றும் பூச்சிகளை வேட்டையாடுகிறது.

இந்த வாரத் தொடக்கத்தில் மலைப்பகுதியில் ஒரு நீலகிரி மரநாய் சுற்றித்திரிந்த வீடியோ ஒன்றை ஐஏஎஸ் சுப்ரியா சாஹூ வெளியிட்டுள்ளார். சுற்றுலா பயணிகள் பதிவு செய்துள்ள இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

சுப்ரியா அந்த வீடியோவில், ‘’ஒரு நண்பர் அரிதான நீலகிரி மரநாய் ஒன்றின் வீடியோவை பகிர்ந்துள்ளார். நீலகிரி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் காடுகள் மற்றும் புல்வெளிகளில் அரிதாகக் காணப்படும் விலங்கு இது. அடர்ந்த பழுப்புநிற ரோமங்களுடனும், பிரகாசமான மஞ்சள்நிற கழுத்தையும் கொண்டது இந்த விலங்கு. ஐயுசிஎன்னால் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என பட்டியலிடப்பட்டது’’ எனக் குறிப்பிட்டுள்ளார். இதை 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். பலரும் வியப்பான கருத்துக்களையும் பகிர்ந்துள்ளனர்.