டிரெண்டிங்

#Topnews தமிழகத்தில் 144 தடை உத்தரவு முதல் பிரிட்டன் முடக்கம் வரை....

#Topnews தமிழகத்தில் 144 தடை உத்தரவு முதல் பிரிட்டன் முடக்கம் வரை....

webteam

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு. வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் சென்று வராமல் மதுரையிலேயே வசித்து வரும் ஒருவருக்கும் பாதிப்பு.

கொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு. 5 பேருக்கு மேல் பொது இடங்களில் கூடினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை.

பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் என அறிவிப்பு. மருத்துவமனைகள், வங்கிகள், ஏடிஎம் மையங்கள் வழக்கம்போல் செயல்பட நடவடிக்கை.

தடை உத்தரவு அறிவிப்பால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்த மக்கள். போதிய பேருந்துகள் இல்லாமல் அவதி.

நாளை மறுநாள் நடைபெறவிருந்த பிளஸ் ஒன் தேர்வு ஒத்திவைப்பு. பிளஸ் 2 தேர்வு இன்று திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அரசு அறிவிப்பு.

சென்னையில் சுமார் 3 ஆயிரம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு. தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே நடமாடினால் கடும் நடவடிக்கை என மாநகராட்சி எச்சரிக்கை.

இந்தியாவில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்வு. உலகெங்கும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது.

யூனியன் பிரதேசங்கள்,மாநிலங்கள் என 548 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு - உள்நாட்டு விமானச் சேவை நாளை முதல் ரத்து.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது. நோய் பரவும் வேகம் அதிகரித்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கவலை.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 3 வாரங்கள் பிரிட்டன் முடக்கப்படுவதாக அறிவிப்பு. மக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டம் என பிரதமர் போரிஸ் ஜான்சன் வேண்டுகோள்.