விபத்தை ஏற்படுத்திய லாரி CCTV
விபத்தை ஏற்படுத்திய லாரி CCTV File image
டிரெண்டிங்

கட்டுப்பாட்டை இழந்த லாரி... உயிரை பணயம் வைத்து விபத்தை தடுத்த இளைஞர்! #ViralVideo

PT WEB

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில், லாரியொன்று கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கிச் சென்றது. வெங்காயம் ஏற்றிச் சென்ற அந்த லாரியின் பிரேக் செயலிழந்ததால் பின்னோக்கி சென்று விபத்துக்குள்ளானது.

CCTV

அப்போது ஒரு இளைஞர், லாரி பின்னால் இருந்த வாகனங்களை ஓடி சென்று எச்சரித்தார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் பின்னோக்கி சென்ற நிலையில், அந்த திசையிலேயே லாரியின் பின்னாலேயே இளைஞரும் சென்றுள்ளார். தன் உயிரை பணயம் வைத்து பிறரை காப்பாற்றிய அவர், இறுதியில் தானும் சாமர்த்தியமாக தப்பித்தார். இறுதியில் அந்த லார ஒரு சுவற்றில் லேசாக மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.