ATM  facebook
டெக்

மே 1 முதல்.... இனி 5 முறைக்கு மேல் ATM ல் பணம் எடுத்தால்..... இவ்வளவு கட்டணமா?

இந்தியாவில் புதிய வங்கி விதிகள் ஏப்ரல் 1, 2025 முதல் நடைமுறைக்கு வரவுள்ளன

ஜெனிட்டா ரோஸ்லின்

மே 1, 2025 முதல் ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் கட்டணங்கள் உயரும். ஏனெனில் இந்திய ரிசர்வ் வங்கி ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதற்கான கட்டணத்தை 3 ரூபாயிலிருந்து 23 ரூபாயாக உயர்த்த வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் புதிய வங்கி விதிகள் ஏப்ரல் 1, 2025 முதல் நடைமுறைக்கு வரவுள்ளன. இதன்படி, ஏடிஎம்களில் வரம்பை தாண்டி பணம் எடுக்கும்போது வசூலிக்கப்படும் கட்டணம் உயரவுள்ளது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. வாடிக்கையாளர்கள் மாதம்தோறும் 5 முறை, கட்டணமின்றி ஏடிஎம் சேவை பயன்படுத்தலாம். பணம் எடுத்தல், இருப்பு தொகையை அறிதல் உள்ளிட்டவற்றுக்காக பயன்படுதிக்கொள்ளலாம்.

ஆனால், 5 முறைக்கு மேல் பயன்படுத்துவதற்கு, 21 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணத்தை மே 1 ஆம் தேதி முதல் 23 ரூபாயாக அதிகரிக்க, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதியளித்துள்ளது. மறுபுறம், வேறொரு வங்கியின் ஏடிஎம்மைப் பயன்படுத்தினால், மெட்ரோ நகரங்களில் ஒரு மாதத்தில் அதிகபட்சம் 3 இலவச பரிவர்த்தனைகளையும், மெட்ரோ அல்லாத நகரங்களில் அதிகபட்சம் 5 இலவச பணம் எடுக்கலாம். இலவச பரிவர்த்தனைகளின் வரம்பைத் தாண்டிய பிறகு, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.23 கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதலாக, ஏப்ரல் 1 முதல், சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை முந்தையதை விட அதிகமாக இருக்க வேண்டும். குறைந்தபட்ச இருப்புத் தேவையானது நகர்ப்புறம், கிராமப்புறங்களைப் பொறுத்து மாறுபடும், கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்கப்பட வேண்டும். வாடிக்கையாளர்கள் அவ்வாறு செய்யத் தவறினால், அவர்கள் அபராதத்தை சந்திக்க நேரிடும்.