கடந்த ஜனவரி மாதம் எக்ஸ் 100 போனை அறிமுகம் செய்த விவோ, அதன் மேம்படுத்தப்பட்ட அடுத்த பதிப்பாக இந்த எக்ஸ் 200-ஐ வெளியிட்டுள்ளது. இதன் பிரதான கேமரா 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது. செல்பி கேமரா 32 மெகாபிக்சலை கொண்டுள்ளது. இந்த போனின் விலை 65 ஆயிரம் ரூபாய் முதல் தொடங்குகிறது.
அதே போல் சிங்கிள் வேரியண்ட் மாடலாக வெளிவந்துள்ள எக்ஸ் 200 புரோ மாடலின் விலை 95 ஆயிரம் ரூபாயாக நிர்ணயக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் தனது பிராண்டின் பெயரில் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்து வரும் விவோ நிறுவனம், தனது புதிய விவோ எக்ஸ் 200 ஸ்மார்ட் ஃபோனின் விற்பனை, வருகிற19ம் தேதி முதல் தொடங்கும் என அறிவித்துள்ளது.