ஆதார் அட்டை
ஆதார் அட்டைமுகநூல்

நாளையே கடைசி... ஆதார் அட்டையை ஆன்லைன், ஆஃப்லைனில் எப்படி புதுப்பிப்பது? முழு விவரம்!

ஆதார் அட்டை தற்போது அனைத்து நடைமுறைகளுக்கும் தேவைப்படும் நிலையில், இந்த புதுப்பித்தலை காலக்கெடு முடிவதற்குள் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம் ஆகிறது.
Published on

ஆதார் விவரங்களை டிசம்பர் 14ஆம் தேதிக்குள் இலவசமாக புதுப்பிக்கும் வாய்ப்பை UIDAI ஏற்கனவே வழங்கியுள்ளது. 10 ஆண்டுகளாக புதுப்பிக்காமல் உள்ள ஆதார் அட்டையை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் புதுப்பித்துக்கொள்ளலாம். ஏற்கனவே செப்டம்பர் 14 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் அது நீட்டிக்கப்பட்டு டிசம்பர் 14 வரை அறிவிக்கப்பட்டது.

Aadhaar
Aadhaarfile

ஆதார் அட்டையில் 10 ஆண்டுகளாக முகவரி, புகைப்படம், போன் நம்பர் போன்ற விவரங்களை புதுப்பிக்காமல் இருந்தால் அவற்றை புதுப்பித்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஆதார் அட்டை தற்போது அனைத்து நடைமுறைகளுக்கும் தேவைப்படும் நிலையில், இந்த புதுப்பித்தலை காலக்கெடு முடிவதற்குள் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம் ஆகிறது.

ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி?

myaadhaar.uidai.gov.in என்ற பக்கத்தை பயன்படுத்தி புதுப்பித்துக்கொள்ளலாம்.

myaadhaar.uidai.gov.in பக்கத்தில் login செய்து ஆதார் நம்பரை கொடுத்த பிறகு captcha code-ஐ கொடுக்கவும். பிறகு send otp என்பதை click செய்து login கொடுக்கவும்.

அதில் ‘Document Update’ என்பதை செலக்ட் செய்து கொடுக்கப்பட்ட guidelines-ஐ படித்த பிறகு next என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.

ஆதார் அட்டை
மெசேஜ் கவனிக்கவில்லையென உறவுகளுடன் மோதல் வருகிறதா? இதோ தீர்வு.. வந்தாச்சு அசத்தல் Whatsapp Update!

I verify that the above details are correct என்ற விவரத்தை சரிபார்த்து next என்பதை கொடுக்கவும்.

முகவரி மற்றும் அடையாள ஆவணங்களை பதிவேற்றி submit கொடுக்கவும்.

உங்களது மெயிலுக்கு ‘Service Request Number (SRN)’ என்ற எண் வரும். இதை டிராக் செய்து ஆதார் அட்டை அப்டேட் என்ன நிலையில் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஆஃப்லைனில் புதுப்பிப்பது எப்படி?

ஆன்லைனில் ஆதாரை புதுப்பிக்க முடியாதவர்கள் நேரடியாக ஆதார் மையம் / தபால் அலுவலகம் / இ சேவை மையம் சென்று விவரங்களை புதுப்பித்துக் கொள்ளலாம்.

ஆதார் அட்டை
வெறும் 15 நிமிடங்கள்தான்... மனிதனை குளிப்பாட்டும் ஏஐ வாஷிங் மெஷின்!

ஆதார் அட்டையை புதுப்பிக்க முகவரி மற்றும் அடையாள சான்றிதழ்கள் தேவைப்படும். வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை, பாஸ்போர்ட், வங்கி பாஸ்புக் போன்றவையை பயன்படுத்தலாம். அதேபோல பான் அட்டை, போஸ்ட் ஆபிஸ் பாஸ்புக் , ஓட்டுநர் உரிமம் , கடைசி மூன்று மாதத்தின் வீட்டு கேஸ் ரசீது , தண்ணீர் பில் ரசீது , மின்கட்டண ரசீது போன்றவற்றை முகவரி சான்றாக பயன்படுத்தலாம் .

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com