social media  file photo
டெக்

சோஷியல் மீடியா தாக்கம்.. மாணவர்களில் 52% பேருக்கு டிஜிட்டல் மன அழுத்தம்!

10–13 வயதினரில் 20% பேருக்கும் அதிகப்படியானோர் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதாகவும், இதில் 50% சதவீதம் பேருக்கு மன அழுத்தம் இருப்பதாகம் ஆய்வு ஒன்று கூறுகிறது.

Rishan Vengai

சமூக வலைதளங்கள் அதிகமாக பயன்படுத்தும் 10-13 வயதினருக்கு 20% மன அழுத்தம் ஏற்படுகிறது. 14-16 வயதினருக்கு இது 12% ஆக குறைவாக உள்ளது. 52% மாணவர்கள் மிதமானது முதல் கடுமையான மன அழுத்தத்தை அனுபவிக்கின்றனர்.

10 முதல் 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், 14 முதல் 16 வயதுடைய இளம் பருவத்தினரைவிட சமூக வலைதளப் பயன்பாட்டால் அதிக மன அழுத்தத்தைச் சந்திப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

சண்டிகர் மற்றும் ஹரியானாவின் பஞ்ச்குலா மாவட்டத்தைச் சேர்ந்த 1,306 மாணவர்களிடம், முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (PGIMER) நடத்திய ஆய்வில், 10 முதல் 13 வயதினரில் சுமார் 20 சதவீதம் பேர் சமூக வலைதளங்களை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டது.

இது 14 முதல் 16 வயதினரில் 12 சதவீதமாக உள்ளது. ஆய்வில் பங்கேற்றவர்களில் 52 சதவீதம் பேர் மிதமானது முதல் கடுமையானது வரையிலான டிஜிட்டல் மன அழுத்தத்தை அனுபவித்துள்ளனர்.

தினமும் 3 மணி நேரத்திற்கும் மேல் சமூக வலைதளங்களைப் பயன்படுத்திய மாணவர்களில் 64 சதவீதம் பேர் வார நாட்களில் மன அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளனர். இணையச் சார்பு சுமார் 40 சதவீத மாணவர்களிடம் காணப்பட்டது ஆய்வில் தெரியவந்துள்ளது.