MCA FEE  facebook
டெக்

MCA FEE நடத்திய ஆய்வு... கூகுள் பிளே ஸ்டோரில் உலா வரும் போலியான கடன் செயலிகள் அம்பலம்!

MCA FEE எனப்படும் பாதுகாப்பு மென்பொருள் நிறுவனம் நடத்திய ஆய்வில், கூகுள் பிளே ஸ்டோர் மூலம் போலியான கடன் செயலிகள் உலா வருவது தெரியவந்துள்ளது.

PT WEB

MCA FEE எனப்படும் பாதுகாப்பு மென்பொருள் நிறுவனம் நடத்திய ஆய்வில், கூகுள் பிளே ஸ்டோர் மூலம் பல போலியான கடன் செயலிகள் உலா வருவது தெரியவந்துள்ளது.

அதன்படி, பிளே ஸ்டோரில் RAPID FINANCE, PRESTAMO SEGURO, RAPIDO SEGURO உள்ளிட்ட 15 போலி கடன் செயலிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இந்தியாவில் இந்த 15 போலி செயலியை 8 மில்லியன் பேர் டவுன்லோடு செய்து பயன்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

டவுன்லோடு செய்தவர்களின் தனிப்பட்ட விவரங்கள் போலி செயலிகள் வாயிலாக திருடப்பட்டு உள்ளதாகவும், இந்த செயலிகளை டவுன்லோடு செய்வதால் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் ஹேக்கர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.