மொபைல் போன்கள்
மொபைல் போன்கள் புதிய தலைமுறை
டெக்

மொபைல் சர்வீஸுக்கு மட்டும் இந்தியர்கள் இவ்வளவு தொகை செலவிடுகிறீர்களா? வெளியான புள்ளிவிவரம்!

PT WEB

மொபைல் போன் சேவை வருவாய் குறித்த விரிவான புள்ளிவிவரங்களை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் மொபைல் போன் சேவைக்காக இந்தியர்கள் செலவிட்ட தொகை 52,400 கோடி ரூபாய் என கூறப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் செலவிட்டதை காட்டிலும் 82% அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இணையதள சேவைகளை பயன்படுத்துவதற்கான டேட்டாவிற்காக மட்டும் 44 ஆயிரத்து 700 கோடி ரூபாயை இந்தியர்கள் செலவிட்டுள்ளதாக மத்திய ஆணையம் தெரிவித்துள்ளது.

5ஜி சேவையால் டேட்டா பயன்பாடு அதிகரிப்பு, ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை பார்த்தது போன்றவையே மொபைல் போன் சேவைக்காக செலவிடும் தொகை ஏறக்குறைய 2 மடங்கு அதிகரிக்க காரணம் என்றும் ஒழுங்குமுறை ஆணையம் கூறியுள்ளது.

மொபைல் போன் சேவை இணைப்பு ஒவ்வொன்றுக்கும் இந்தியர்கள் செலவிடும் மாதாந்திர சராசரி தொகை 2.5% அதிகரித்து 153 ரூபாயை தொட்டுள்ளதாக ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் பங்குத்தரகு நிறுவனம் கூறியுள்ளது.