ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்பேஸ் டாக்கிங் பணிகளை மேற்கொள்ளும் வகையில் புதிய செயற்கைக்கோளை இஸ்ரோ இன்று விண்ணில் செலுத்துகிறது.
இஸ்ரோவின் ஸ்பேஸ் டாக்கிங் உள்ளிட்ட 24 ஆய்வுகளை மேற்கொள்ள பிஎஸ்எல்வி-C 60 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது. இரவு 9:58 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து விண்ணில் பாய உள்ளது. POEM-4 என்ற திட்டத்தின் கீழ் 24 ஆய்வுகளை இஸ்ரோ மேற்கொள்ள உள்ளது.
இதில் இஸ்ரோவின் 14 ஆய்வுகளும், தனியார் அமைப்புகளின் 10 ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. குறிப்பாக 2 தனியார் அமைப்புகள், விண்ணில் தாவர வளர்ப்பு குறித்த ஆய்வுகளை மேற்கொள்கின்றன. ஒரு தனியார் அமைப்பு உருவாக்கிய விண்ணில் உள்ள குப்பைகளை அழிக்கும் ரோபோவும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளது.
அத்துடன் இஸ்ரோவின் கனவு திட்டமான மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் ஸ்பேஸ் டாக்கிங் (space docking) எனப்படும், விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதேபோல், 24 ஆய்வுகள் POEM-4 என்ற திட்டத்தின் மூலம் மேற்கொள்ள செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படுகின்றன.