பிஎஸ்எல்வி  புதியதலைமுறை
டெக்

சூரியனின் கொரோனாவை ஆய்வு செய்ய இன்று பாய்கிறது PSLV C-59 ராக்கெட்!

பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் இன்று மாலை 4:08 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது.

PT WEB

செய்தியாளர்: பால வெற்றிவேல்

விண்ணில் பாய இருக்கும் பி.எஸ்.எல்.வி-சி-59 ராக்கெட்...

பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் இன்று மாலை 4:08 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது. 'புரோபா-3’ என்று பெயரிடப்பட்ட இணை செயற்கைகோளை ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த செயற்கைகோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட். இது சூரியனின் ஒளிவட்டப் பகுதியை ஆய்வு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்எல்வி ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

‘புரோபா-3’ திட்டத்தில் உள்ள 2 செயற்கைகோள்கள் 550 கிலோ எடை கொண்டவை. சூரியனின் ஒளிவட்ட பகுதி மற்றும் சூரியனின் வளிமண்டலமான கொரோனாவை ஆய்வு செய்யும் வகையில் இந்த இணை செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த 2 செயற்கைகோள்களையும், முதலில் குறைந்தபட்சம் 600 கிலோ மீட்டர் தூரத்திலும், அதிகபட்சம் 60,530 கிலோ மீட்டர் உயரமுள்ள நீள்வட்ட சுற்றுவட்ட பாதையிலும் நிலை நிறுத்தி, பின்னர் இணை சுற்றுவட்டப் பாதையில் இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி சி59 ராக்கெட் நிலை நிறுத்தும்.

ராக்கெட்டுக்கான எரிபொருட்கள் நிரப்பப்பட்டு, இறுதிக்கட்ட பணியான கவுன்ட்டவுன் 25 மணி நேரமாக நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று பிற்பகல் 3.08 மணிக்கு கவுன்ட்டவுன் தொடங்கியது. இதனை முடித்து கொண்டு இன்று மாலை 4.08 மணிக்கு ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்கிறது.