இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு செயலிகளுக்கான பயன்பாடு அதிவேகமாக உயர்ந்து வரும் நிலையில் அதை கையாள ஏதுவாக டேட்டா சென்டர் எனப்படும் தரவுகள் சேமிப்பு மையங்களை அமைக்க ஓபன் ஏஐ முடிவு செய்துள்ளது. முன்னதாக ரிலையன்ஸ் நிறுவனம் குஜராத்தின் ஜாம் நகரில் உலகின் மிகப்பெரிய டேட்டா சென்டரை அமைக்கப்போவதாக அறிவித்திருந்தது. இதனால் தரவு சேமிப்பு சேவை போட்டி வெகுவாக அதிகரிக்க உள்ளது.
இதற்கிடையே ஓபன் ஏஐ நிறுவனத்தை 98 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கும் எலான் மஸ்க்கின் முயற்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஓபன் ஏஐ நிறுவனத்தை வாங்கும் எலான் மஸ்க்கின் கோரிக்கையை ஏற்க முடியாது என அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு முடிவெடுத்துள்ளது. முன்னதாக, “வரும் நாட்களில் மென்பொருள் பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் செய்யும்” என ஓபன் ஏஐ நிறுவனர் சாம் ஆல்ட்மென் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.