இன்ஸ்டாகிராம் fb
டெக்

இன்ஸ்டாகிராம்: 3:4 விகித படங்களை நேரடியாக பதிவிட புதிய வசதி!

இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிடுபவர்களுக்கு புதிய வசதி வழங்கப்பட்டுள்ளது.

PT WEB

இதன்படி இனி 3க்கு 4 விகிதாச்சாரம் கொண்ட படங்களை இனி நேரடியாக பதிவிட முடியும். இதுவரை 1க்கு 1, 4க்கு 5 விகிதாச்சாரங்களில் உள்ள படங்களை மட்டுமே நேரடியாக இன்ஸ்டாவில் பதிவிடும் வசதி இருந்தது.

3க்கு 4 அளவு உள்ள படங்களை கிராப் செய்தே பதிவேற்ற வேண்டியிருந்தது. இந்நிலையில் அந்த படங்களையும் நேரடியாக பதிவிடும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் மூல படத்தின் தெளிவில் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே பதிவிட முடியும், தற்போது பெரும்பாலான செல்போன் கேமராக்களில் எடுக்கப்படும் படங்கள் 3க்கு 4 என்ற விகிதச்சாரத்திலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது