3,000 ரூபாய்க்கு மேல் மேற்கொள்ளப்படும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு MDR என்று அழைக்கப்படும் வணிகர் கழிவு கட்டணம் விதிக்க பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதன்படி, வாடிக்கையாளர் மேற்கொள்ளும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு வணிக நிறுவனங்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.
டிஜிட்டல் பரிவர்த்தனை செயல்பாடுகளை நிர்வகிக்க கூடுதல் செலவாவதாக வங்கிகள் மற்றும் பரிவர்த்தனை நிறுவனங்கள் கூறிவந்த நிலையில், மத்திய அரசு இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.