டெக்

புதிய ஆண்ட்ராய்டு போனை அறிமுகம் செய்யும் HTC?

EllusamyKarthik

தைவான் நாட்டு எலக்ட்ரானிக் சாதனங்களை தயாரித்து வரும் நிறுவனமான HTC ஏப்ரல் வாக்கில் புதிய ஆண்ட்ராய்டு போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்துடன் இணைந்த HTC பிக்சல் போன் உற்பத்தியில் உதவி வந்தது. அதே நேரத்தில் ஸ்மார்ட்போன் தொடர்பான டிசைன் மற்றும் ஆய்வு தகவல்கள் உட்பட சிலவற்றை சுமார் 1.1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்திருந்தது குறிப்படத்தக்கது. 

அதன்பிறகு மலிவு விலையிலான ஆண்ட்ராய்டு போன்களை வெளியிட்டு வந்தது HTC. இந்த நிலையில் வரும் ஏப்ரலில் புதிய ஃபிளாக்ஷிப் (Flagship) ஆண்ட்ராய்டு போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த போன் சில நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை GSM அரேனா தெரிவித்துள்ளது.