AI
AI File Image
டெக்

அரசுப் பணிகளிலும் கால்பதிக்கும் AI - கோவா அரசின் புதிய முயற்சி

PT WEB

அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் வழங்கப்பட உள்ளதாக கோவா அமைச்சர் ரோகன் காக்குண்டே தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாட்பாட் எனப்படும் கணினி வழி குரல் தொடர்பு முறை ஏற்படுத்தப்பட்டு, சேவைகள் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் தெரிவித்தார். முதற்கட்டமாக பொதுமக்கள் குறை தீர்ப்பு, சுற்றுலா ஆகிய இரு துறைகளில் மட்டும் இந்த சேவை வழங்கப்படும் என்றும் பின்னர் மற்ற துறைகளுக்கும் இது விரிவாக்கம் செய்யப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் தனியார் துறையில் அதிகரித்து வரும் நிலையில் அரசுகளும் அதை தற்போது நாட தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது