டெக்

வாட்ஸ்அப் சிஇஓ-விடம் மத்திய அரசு வலியுறுத்தல்

வாட்ஸ்அப் சிஇஓ-விடம் மத்திய அரசு வலியுறுத்தல்

webteam

வாட்ஸ் அப்பில் வதந்திகள் பரவுவதை தடுக்க தொழில்நுட்ப ரீதியிலான தீர்வு வேண்டும் என வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு மத்திய தகவல் தொழிட்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா வந்துள்ள வாட்ஸ்அப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான கிறிஸ் டேனியல்ஸ் நேற்று மத்திய தகவல் தொழிட்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர், இந்தியாவில் வாட்ஸ்அப்புக்காக ஒரு அமைப்பை ஏற்படுத்தி புகார்களுக்கு தீர்வு காண்பதற்கான அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதாக தெரிவித்தார். இதை பின்பற்றாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கிறிஸ் டேனியல்ஸிடம் தெவித்ததாகவும் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.