வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ள பாடல் சமூக வலைத்தலங்களில் வைரலாகியுள்ளது.
100 வருடங்கள் இல்லாத மழை கேரளாவில் பெய்தது. இதனால் பெருவெள்ளம் ஏற்பட்டு கேரள மாநிலம் முழுவதும் தண்ணீரில் மிதக்கிறது. இதுவரை 370க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலரை காணவில்லை. ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் சேதமடைந்துவிட்டன. லட்சக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்கியுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவிற்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதிகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்திவரும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கேரள மக்களுக்கு தனது பாடல் ஒன்றில் வரிகளை மாற்றிப்பாடியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைத்த ‘முஸ்தபா முஸ்தாபா’ பாடலை மேடையில் பாடினார். அவர் பாடலை பாடி முடிக்கும் தருணத்தில், கேரளாவிற்காக எனக்கூறி, “கேரளா.. கேரளா.. டோண்ட் வொர்ரி கேரளா.. காலம் நம் தோழன் கேரளா” எனப்பாடினார். அவர் இவ்வாறு பாடியபோது, அரங்கே அதிரும் அளவிற்கு அங்கிருந்தவர்கள் ஆரவாரம் செய்தனர். இந்தப் பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பாகிஸ்தான் பொருட்கள் மீதான சுங்க வரி 200% ஆக உயர்வு
கார் வெடிகுண்டு தாக்குதல் - இந்தியாவுக்கு புதிய அச்சுறுத்தல்?
“40 ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.5 லட்சம்” - சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
8 ஆண்டுகள் சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் அதிரடி மாற்றம்
சிஆர்பிஎப் வீரரின் கடைசி செல்ஃபி, கடைசி தொலைபேசி உரையாடல்
மீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா ? உரி முதல் புலவாமா வரை !
அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா?
ரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?
கலைப் படைப்பா ? ஆபாச படைப்பா ? எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'
சினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் !