ஏஐ துறையில் சீனாவின் புதிய அதிரடியாக மூன்ஷாட் நிறுவனம் உருவாக்கிய கிமி கே3 மாடல் அறிமுகமாகியுள்ளது. உலகளவில் பிரபலமான கிளாட், சாட் ஜிபிடி போன்ற மாடல்களை விட இது மேம்பட்டது என நிறுவனம் வலியுறுத்துகிறது. ஏஐ ஆதிக்கம் ஒரே நாட்டுக்குச் செல்லக்கூடாது, உலகளாவிய ஒத்துழைப்பின் பலனாக இருக்க வேண்டும் என சீன அதிபர் ஷி ஜின்பிங் கருத்து தெரிவித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஏஐ துறையில் அமெரிக்க நிறுவனங்களுக்கு கடும்போட்டி தந்துவரும் சீனா அடுத்து புதிதாக மேலும் ஒரு திறன் மிகுந்த ஏஐ மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. கிமி கே3 என்ற இந்த மாடலை பெய்ஜிங்கை சேர்ந்த மூன்ஷாட் என்ற புத்தாக்க நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த ஏஐ மாடல் உலகளவில் பிரபலமாக உள்ள ஆந்த்ரபிக் நிறுவனத்தின் கிளாட் மற்றம் ஓபன் ஏஐ-யில் சாட் ஜிபிடியை விட திறன்மிக்கது என மூன் ஷாட் கூறியுள்ளது.
அதிநவீன தொழில்நுட்பங்கள் சீனாவிற்கு கிடைப்பதற்கு அமெரிக்க பல வழிகளில் முட்டுக்கட்டை போடும் நிலையில் இந்த புதிய ஏஐ மாடல் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு நாட்டின் ஆதிக்கம் செலுத்துவது சரியாகாது என்றும் அது உலகளாவிய கூட்டு ஒத்துழைப்பின் பிரதிபலிப்பாக இருக்கவேண்டும் என்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது