\
டெக் மகிந்திரா தலைவர் ஆனந்த் மகிந்திரா
டெக் மகிந்திரா தலைவர் ஆனந்த் மகிந்திரா web

"ஏஐ எழுச்சியால் ஐடி துறை பாதிக்கப்படாது.." - டெக் மகிந்திரா தலைவர் ஆனந்த் மகிந்திரா உறுதி!

ஏஐ எழுச்சியால் ஐடி துறை பாதிக்கப்படாது என டெக் மகிந்திரா தலைவர் கூறியுள்ளார்..
Published on

ஏஐ தொழில்நுட்பத்தின் எழுச்சியால் இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை பாதிக்கப்படாது என டெக் மகிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மகிந்திரா தெரிவித்துள்ளார். ஐடி நிறுவனங்களின் பணி மாறுபட்ட வடிவங்களில் இன்னும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார். ஏதோ ஒரு நாட்டில் உருவாக்கப்படும் ஏஐ வசதிகளை பயன்படுத்திக்கொள்ளும் நாடாக மட்டும் இந்தியா இருக்கக்கூடாது என்றும் அதை உருவாக்குபவராகவும், வடிவமைப்பவராகவும் நம்பகமான முறையில் செயல்படுத்துபவராகவும் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Representative image of artificial intelligence (AI)
Representative image of artificial intelligence (AI)web

ஏஐ காரணமாக ஐடி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு குறையும் என்ற அச்சம் பரவலாக உள்ள வேளையில் அத்துறை பங்குகள் விலை வெகுவாக குறைந்துள்ளதும் அத்துறையின் எதிர்காலம் குறித்த கேள்விகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் ஆனந்த் மகிந்திராவின் விளக்கம் கவனம் பெறுகிறது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com