iPhone 17 சீரிஸ் pt web
டெக்

செப்டம்பர் சர்ப்ரைஸ்: iPhone 17 சீரிஸ், புதிய வாட்ச், ஏர்பாட்ஸ்.. மிரட்டும் மாடல்களுடன் ஆப்பிள்

வழக்கமாக ஆப்பிள் நிறுவனம் ஐபோன், ஐபோன் ப்ரோ, ஐபோன் மேக்ஸ் என 3 மாடல்களை வெளியிடும். இந்தாண்டு அத்தோடு சேர்த்து புதிதாக ஐபோன் 17 ஏர் மாடலையும் வெளியிடுகிறது.

Vaijayanthi S

ஆப்பிள் நிறுவனம் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் புதிய ஐபோன் மாடல்களை வெளியிடுவது வழக்கம்.. அந்தவகையில் தற்போது, iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro, மற்றும் iPhone 17 Pro Max ஆகிய நான்கு மாடல்களை வெளியிடுகிறது. ஐபோன் மட்டுமின்றி ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் ஏர்பாட்களையும் அந்த நிறுவனம் வெளியிடுகிறது. இந்த நிகழ்வு கலிபோர்னியாவின் குபெர்டினோவில் உள்ள Apple தலைமையகத்தில் இரவு 10 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

AirPods Pro 3

வழக்கமாக ஆப்பிள் நிறுவனம் ஐபோன், ஐபோன் ப்ரோ, ஐபோன் மேக்ஸ் என 3 மாடல்களை வெளியிடும். இந்தாண்டு அத்தோடு சேர்த்து புதிதாக ஐபோன் 17 ஏர் மாடலையும் வெளியிடுகிறது. இது வெறும் 5.5 மிமீ மெல்லியதாக இருக்கும். இவ்வளவு மெல்லியதாக இருந்தாலும் கூட இதில் 6.6 இன்ச் பெரிய டிஸ்ப்ளே இருக்கும். மேலும், இதில் சிம் ட்ரே கூட இருக்காதாம். ஈ-சிம் வசதி மட்டுமே இருக்கும். அந்த அளவுக்கு வடிவமைப்பையே மொத்தமாக மாற்றி வெளியிடுகிறது.

ஐபோன் 17 சீரிஸ் உடன் சேர்த்து ஆப்பிள் வாட்ச் சீரீஸ் 11 (Apple Watch Series 11) தொடங்கி புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ தேர்ட் ஜெனெரேசன் டிடபுள்யூஎஸ் ஹெட்செட் (AirPods Pro 3rd Generation TWS Headset) வரை பல்வேறு பிரிவுகளில் இன்னும் பல தயாரிப்புகள் அறிமுகமாகின்றன.

மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபோன் மாடல்களில் டைட்டானியம் பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்த முறை மீண்டும் டைட்டானியத்தில் இருந்து அலுமினியத்திற்கு மாற்றப்பட்டுள்ளது... ஐபோன் 17 ப்ரோ மாடல்கள் பாதி கிளாஸ், பாதி அலுமினியம் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன் 17 ஏர் 6.6-இன்ச் 120 ப்ரோமோஷன் டிஸ்ப்ளே, மாத்திரை வடிவில் 48-மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் ஆப்பிளின் இன்-ஹவுஸ் வைஃபை மற்றும் சி1 மோடம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இதன் டச் ஸ்கிரீன்120Hz திறனில் கொடுக்கப்பட்டுள்ளது. 3,600mAh பேட்டரி திறன் உள்ளது. பின்புறம் 48MP கேமராவும், முன்பக்கம் 24MP கேமரா வசதியும் உள்ளது. இதனுடன் புதிய ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் (Apple Intelligence) AI அம்சங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. 128 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி மற்றும் 1 டிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன.

iPhone 17ஆரம்ப விலை சுமார் ரூ.89,900 ஆகவும், iPhone 17 Air சுமார் ரூ.95,000 ஆகவும், iPhone 17 Pro Max சுமார் ரூ.1,64,900 ஆகவும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இதற்கான முன்பதிவு செப்டம்பர் 12-ம்தேதி தொடங்குகிறது.. செப்டம்பர் 19-ம்தேதி முதல் சந்தைகளில் விற்பனைக்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.