SUV கார்  facebook
டெக்

SUV கார் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

புத்தாண்டில் SUV கார் பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! மஹிந்தரா தொடங்கி டாடா நிறுவனம் வரை 7 புதிய SUVக்கள் இந்த ஆண்டு விற்பனையை தொடங்குகின்றன.

PT WEB

புத்தாண்டில் SUV கார் பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! மஹிந்தரா தொடங்கி டாடா நிறுவனம் வரை 7 புதிய SUVக்கள் இந்த ஆண்டு விற்பனையை தொடங்குகின்றன.

இந்தியர்கள் தற்போது சொகுசு கார்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்கேற்றாற்போல் பல கார் தயாரிப்பு நிறுவனங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு SUVக்களை சந்தைப்படுத்தி வருகின்றன. அந்தவகையில், மாருதி சுசுகி தனது முதல் மின்சார வாகனமான E- VITARAவை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

ஹூண்டாய் நிறுவனம் தனது தயாரிப்பான CRETA SUV மின்சார வாகனத்தை இந்த மாதம் அறிமுகப்படுத்துகிறது. மஹிந்தரா நிறுவனத்தின் BE 6 மற்றும் XEV9e SUVக்களின் அடிப்படை விலையை ஏற்கனவே அறிவித்த நிலையில், மற்ற மாடல்களின் விலை விவரங்கள் இந்த மாதம் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது. அதேபோல, MERCEDES BENZ G 580 SUV, ஜனவரி 9ஆம் தேதி விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் மேலும் 2 மாடல் SUVக்களும் இந்த மாதம் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹாரியர் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது