stephen hawking - krish arora - albert einstein web
டெக்

ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கை விட அதிக IQ.. 10 வயது இந்திய வம்சாவளி ‘அறிவு குழந்தை’!

இந்திய வம்சாவளியான 10 வயது சிறுவன் க்ரிஷ் அரோரா IQ திறனில் தலைசிறந்த விஞ்ஞானிகளான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் போன்றவர்களை மிஞ்சி தலைப்பு செய்திகளில் இடம்பிடித்துள்ளார்.

Rishan Vengai

சில குழந்தைகள் எப்போதும் அதிக சுறுசுறுப்புடன் இருப்பார்கள். பெரியவர்களால் செய்ய முடியாத கடினமான சில விஷயங்களை கூட எளிதாக சிறுவயது குழந்தைகள் செய்துவிடுவார்கள். ஆனால் அவர்களிலும் சில குழந்தைகள் ஒரு விடையை தேடுவதில் ஆயிரம் கேள்விகளை முன்வைப்பார்கள், அவர்களுடைய அதிகப்படியான ஆற்றல் சாதாரண மனிதர்களால் எளிதில் முடியாதவற்றை முடித்துவைக்க வழிவகுக்கும்.

அப்படிப்பட்ட ஒரு குழந்தையாகதான் இந்த 10 வயது க்ரிஷ் அரோராவும்.
krish arora

பல அற்புதமான ஆற்றலுடன் காணப்படுகிறார். இவருடைய IQ லெவலானது 162 குறியீடுடன் இருக்கிறது. இது மிகச்சிறந்த இயற்பியல் விஞ்ஞானியான ஐன்ஸ்டீனை விடவும், நவீனகால விஞ்ஞானியாக பார்க்கப்பட்ட ஸ்டீபன் ஹாக்கிங்கை விடவும் அதிகமாகும். மேலும் அதீத அறிவுடையவர்களின் IQ லெவலாக கணிக்கப்படும் 130 குறியீடுகளை விட அதிகமான லெவலுடன், க்ரிஷ் அரோரா காணப்படுகிறார்.

யார் இந்த க்ரிஷ் அரோரா?

மேற்கு லண்டனில் உள்ள ஹவுன்ஸ்லோவைச் சேர்ந்த 10 வயதான இந்திய வம்சாவளி சிறுவன் கிரிஷ் அரோரா. இவருடைய பெற்றோர் மௌலி மற்றும் நிச்சால். 10 வயதேயான சிறுவன் கிரிஷ் அரோரா IQ மதிப்பெண்களில் உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகளான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கை விஞ்சி சாதனை படைத்துள்ளார்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

மென்சா IQ தேர்வில் 162 மதிப்பெண்களுடன், கணிதம் முதல் இசை வரையிலான துறைகளில் சிறந்து விளங்கும் கிரிஷ், உலகத்தில் தன்னை ஒரு சிறந்த திறமைசாலியாக நிலைநிறுத்திக் கொண்டார். அவரது IQ ஐன்ஸ்டீன் மற்றும் ஹாக்கிங் ஆகியோரை விட இரண்டு புள்ளிகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டீபன் ஹாக்கிங்

க்ரிஷின் அசாதாரண நுண்ணறிவு அவருக்கு தனித்துவமான மென்சா சொசைட்டியில் உறுப்பினராக இடத்தை பெற்றுக்கொடுத்துள்ளது. இது உயர்ந்த IQ திறனுடைய நபர்கள் மட்டுமே இருக்கும் சொசைட்டியாகும்.

அறிவுக்குழந்தையாக ஆச்சரியப்படுத்திய க்ரிஷ் அரோரா..

  • சிறுவயது முதலே தனது புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்திய க்ரிஷ், 4 வயதில் வெறும் மூன்று மணி நேரத்தில் கணிதப் புத்தகத்தை முடித்ததுடன், 8 வயதில் ஒரே நாளில் தனது வகுப்புப் பாடங்களில் தேர்ச்சியும் பெற்று அசத்தியுள்ளார். தன்னுடைய ஓய்வு நேரத்தில், க்ரிஷ் தனது நண்பர்களின் படிப்பிற்கு உதவிசெய்கிறார். அவரது ஆசிரியர் கணித வகுப்புகளில் பாடமெடுக்க க்ரிஷை அனுமதிப்பதாக கூறப்படுகிறது.

  • பியானோ வாசிப்பதில் அதிக திறமை வாய்ந்தவராக இருக்கும் க்ரிஷ், 10 வயதில் அதிகபட்ச கிரேடான 8 கார்டில் வாசிக்கக்கூடியவராக இருக்கிறார்.

  • அதுமட்டுமல்லாமல் டிரினிட்டி காலேஜ் ஆஃப் மியூசிக் 'ஹால் ஆஃப் ஃபேம்'-ல் இடம்பெற்றார், அவர் ஆறு மாதங்களில் 4 கிரேடுகளை முடித்த பின்னர் பல இசை போட்டிகளில் வென்றுள்ளார். அவருக்கு முழுமையான சுருதியை அறிந்துகொள்ளும் திறமையும் உள்ளது, அதாவது அவருக்கு இசைக்கருவிகளை வாசிக்க குறிப்புகள் தேவையில்லை, அவரது நினைவாற்றலைப் பயன்படுத்தி முழு பாடல்களையும் நினைவில் வைத்திருந்து ஆச்சரியப்படுத்துகிறார்.

  • மேலும் செஸ் விளையாட்டில் சிறந்து விளங்கும் க்ரிஷ், தனது சதுரங்க ஆசிரியரையே தோற்கடித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார். அவர் அடுத்த ஆண்டு, லண்டனில் உள்ள புகழ்பெற்ற குயின் எலிசபெத் பள்ளியில் சேரவிருப்பதாக கூறப்படுகிறது.