செய்தியாளர்: தங்கராஜூ
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரம் மகா மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் வகை வகையான அலகு குத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கிரேன் அலகு, விமான அலகு, சுவாமி அலங்கார முதுகு அலகு, கிரேனில் தொங்கும் அலகு என பக்தர்கள் பல வகையான அலகுகள் குத்திக்கொண்டு தொங்கியபடி கோயிலைச் சுற்றி வந்தனர்.
இந்த திருவிழாவில் காமலாபுரம் உட்பட 18 பட்டி கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டுச் சென்றனர். இதனிடயே அங்கு நடைபெற்ற ஆடலும் பாடலும் கலை நிகழ்ச்சியில், பக்தர்கள் அலகு குத்தி வரும்போது இரட்டை அர்த்த பாடலுக்கு நடனமாடியதாகக் கூறி, இரு தரப்பினர் மோதலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் விரட்டி அடித்தனர்.