கைது செய்யப்பட்ட மோகன்
கைது செய்யப்பட்ட மோகன்  file image
தமிழ்நாடு

'இளநீர் விற்றால் கடன் அடையும்' இளநீரை மட்டும் குறிவைத்து திருடிய வினோத திருடன் - சிக்கியது எப்படி?

PT WEB

பெங்களூரு, கிரிநகர் அருகே உள்ள மண்குதிம்மனா பூங்கா நடைபாதையில் ராஜாண்ணா என்பவர் இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 1200 இளநீர் வாங்கி வந்து விற்பனை செய்து வந்துள்ளார். அதில் 50 இளநீர் மட்டுமே விற்பனை ஆகியுள்ளது மீதம் இருந்த 1150 இளநீர்களையும் தார்ப்பாய் போட்டு மூடி வைத்து விட்டு  வீட்டிற்குச் சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலை பார்த்த போது இளநீர் முழுவதும் காணாமல் போனதைக் கண்டு  அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக ராஜாண்ணா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த  போலீசார் அங்குப் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் காரில் வந்த மர்மநபர் ஒருவர் இளநீரைத் திருடிச் செல்வது பதிவாகியிருந்தது. காரின் நம்பரை வைத்து  போலீசார் விசாரணை நடத்தியதில்  மடிவாளத்தைச் சேர்ந்த மோகன் என்பது தெரியவந்துள்ளது. பின்னர் அவரை கைது செய்து அவரிடம் இருந்த இளநீர் மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதும், ஆன்லைனில்  பெருமளவில் பணத்தை இழந்து 3 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளார் என்பதும், பெங்களூரில் இளநீர் விற்றால் மட்டும் கடனை திருப்பி செலுத்திவிடலாம் என்ற நம்பிக்கையில் இளநீரை மட்டும் குறி வைத்துத் திருடி ஒருவருக்கு விற்பனை செய்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

சி.சி.டி.வி காட்சி

பணம், மற்றும் தங்க நகைகளைத் திருடிச் செல்லும் திருடர்களுக்கு மத்தியில் வினோதமான முறையில் இளநீரை மட்டுமே குறி வைத்துத் திருடிய சம்பவம் போலீசாரை  குழப்பமடைய வைத்துள்ளது.