பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் வென்ற தமிழரசன்
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் வென்ற தமிழரசன் pt desk
தமிழ்நாடு

பாலமேடு ஜல்லிக்கட்டு | “இளைஞர்கள் பாதுகாப்பாக மாடு பிடிக்கணும்” - இரண்டாம் பரிசு வென்ற தமிழரசன்!

webteam

மதுரை மாவட்டம் பாலமேட்டில் நேற்று காலை தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் நடைபெற்றது. வாடி வழியே சீறிப் பாய்ந்து வந்த காளைகள், காளையரின் கைகளில் சிக்காமல் பரிசுகளை பெற்றன. அதேபோல் சீறிவந்த காளைகளை சினம் கொண்டு அடக்கிய காளையரும் சைக்கிள், பீரோ, கட்டில் உள்ளிட்ட பரிசுகளை தட்டிச் சென்றனர்.

jallikattu

இந்நிலையில் இந்தப் போட்டியில் 10 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் தமிழரசன் இரண்டாமிடம் பிடித்தார். அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது....

“எப்பவும் ஃபாலோ பண்ற ரூல்ஸை இப்ப ஃபாலோ பண்ணல. காலையில் இருந்து சாய்ந்தரம் வரைக்கும் களத்தில் இருக்கணும். அதான் வீர விளையாட்டு. ஆனா இப்போ ரெண்டு பேட்ச்சிலேயே போகச் சொல்லிட்டாங்க. இது வீரர்களுக்கு ஒப்பல. அந்த அண்ணன் நல்லா பிடிச்சிருந்தா அவருக்குதான் முதல் பரிசு!

போன வருஷம் இதே இடத்தில் முதல் இடம் பிடித்து கார் பரிசு வாங்குனேன். முதல் பரிசு எடுத்திருக்கணும். முடியல, காலில் அடிபட்டிருச்சு. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் இளைஞர்கள் பாதுகாப்பாக பிடிக்கணும். மாடுகளை பாதுகாக்கணும். சிந்து காளையை அவிழ்க்கக் கூடாது. அதனாலதான் நிறைய அடிபடுறாங்க” என்று தெரிவித்தார்.