ராமதாஸ்  முகநூல்
தமிழ்நாடு

“கட்சியில் எந்த குழப்பமும் இல்லை; சுதந்திரமாக செயல்படுவது அன்புமணியின் உரிமை” - ராமதாஸ் பேட்டி

கட்சியில் எந்த குழப்பமும் இல்லை என்றும் தாங்களே இந்த முரண்பாடுகளை பெரிதாக எடுக்கக்கொள்ளவில்லை என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

PT WEB

பாமக தலைவர் அன்புமணி மீது பாமக நிறுவனர் ராமதாஸ் சரமாரியாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து பேசியது தமிழ்நாடு அரசியல் களத்தில் பெரிய அளவில் பேசுபொருளாக மாறியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நிர்வாகிகளை கூட்டி கூட்டம் நடத்திய அன்புமணி தன்னுடைய கடிதமே செல்லும் என்றும் தான் இனிமேல் சுதந்திரமாக செயல்பட போவதாக தெரிவித்தார். இதனால் இருதரப்புக்கும் இடையே முரண்பாடு முற்றியதாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில், கட்சியில் எந்த குழப்பமும் இல்லை; எல்லாவற்றுக்கும் தீர்வு உண்டு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், “பூம்புகாரில் ஆகஸ்ட் 10ஆம் தேதி மகளிர் மாநாடு நடைபெறும். முழுக்க முழுக்க பெண்கள் கலந்துக்கொள்ளும் மாநாடு. லட்சக்கணக்கான பெண்கள் கலந்துக்கொள்வார்கள். சட்டதிவிகளை நான் பார்க்கவில்லை. நாளை சொல்கிறேன்.

ஒவ்வொரு கட்சி, நாட்டிலும் நடப்படுதுதான். இதனை பெரிதுபடுத்த வேண்டாம். மகளிர் மாநாட்டிற்கு எல்லோருக்கும் அழைப்பு உண்டு. யாரையும் கலந்துக்கொள்ள வேண்டாம் என சொல்லப்போவதில்லை. எந்த முரன்பாடும் இல்லை. என்னை யாராலும் இயக்க முடியாது. 95 ஆயிரம் கிராங்களுக்கு சென்றுள்ளேன். 46 ஆண்டுகளாக பயணிக்கிறேன்.

இன்னும் எத்தனை ஆண்டுகள் பயனிப்பேன் என எனக்கே தெரியாது. உங்களின் ஒத்துழைப்போடு பயனிப்பேன். திலகபான நீக்கப்பட்டு சிறுபான்மையினரை நியமித்துள்ளேன். கடந்த காலங்களில் அப்படித்தான் இருந்தது. இடையில் இருவரை நியமித்திருத்தோம் தற்போது மீண்டும் ஒரு சிறுபான்மையினருக்கு கொடுத்துள்ளோம்.

சுந்ததிரமாக செயல்படுவது ஒவ்வொரு மனிதன், அமைப்பின் கடமைன். அது அவர் உரிமை. நிர்வாகிகள் போவார்கள், வருவார்கள். ஒருவர் போனோல், ஒன்னொருவர் வருவார். ஒருவரின் செயல்பாட்டை பார்த்து கட்சி நிர்வாகிகள் மாற்றம் இருக்கும்.

கட்சியில் எந்த குழப்பமும் இல்லை. எல்லாவற்றுக்கும் தீர்வு உண்டு. தீர்வுகான யோசனை குறித்து, யோசிக்கவில்லை. பெண்கள் மாநாட்டுக்கு மாநாட்டு குழு தலைவராக புத.அருள்மொழி தலைவராக இருப்பார்” என்றார்.