அரசாங்கம் என்பது ஒரு மூடிய அறைக்குள் நடக்கும் விவகாரமல்ல... அது மக்களுக்குச் சொந்தமானது. அரசின் வரவு-செலவு கணக்கு, மாநிலத்தின் ஒட்டுமொத்த கடன், வட்டிச் சுமை மற்றும் கையில் உள்ள நிதி இருப்பு ஆகியவற்றைத் துல்லியமாகத் பிரதிபலிக்கும் கண்ணாடியே வெள்ளை அறிக்கை. துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் நடுநிலையான நிபுணர்கள் இணைந்து தரவுகளைத் திரட்டி இதனைத் தயாரிப்பார்கள்.
முந்தைய ஆட்சியில் நிதி மேலாண்மை எப்படி இருந்தது, தற்போது அரசு சந்திக்கும் சவால்கள் என்ன என்பதை மக்கள் நேரடியாக அறியலாம். வெறும் பிரச்சினைகளை மட்டும் சொல்லாமல், அந்த நிதி நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான எதிர்காலத் திட்டங்களையும் இது முன்வைக்கும். இந்த அறிக்கையின் அடிப்படையில் தான் அரசின் அடுத்தகட்ட பொருளாதாரக் கொள்கைகளும், புதிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளும் அமையும்.
தமிழகத்தின் கடன் சுமை 10 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாகக் கூறப்படும் சூழலில், முதல்வர் விஜய் வெளியிடப்போகும் இந்த வெள்ளை அறிக்கை, மாநிலத்தின் பொருளாதாரப் பாதையைத் தீர்மானிக்கும் மிக முக்கிய ஆவணமாகப் பார்க்கப்படுகிறது