தவெக தலைவர் விஜய், செங்கோட்டையன் web
தமிழ்நாடு

’விஜய் - செங்கோட்டையன் 2 கட்டமாக ஆலோசனை..’ இந்தப் பதவி தான் வழங்கப்படுகிறதா..?

தவெக தலைவர் விஜயுடன் 2 கட்டங்களாக செங்கோட்டையன் ஆலோசனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது..

PT WEB

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தவெக தலைவர் விஜயுடன் இரண்டு கட்டமாக ஆலோசனை நடத்தியுள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் நடந்த இந்த சந்திப்பில், அவர் தவெகவில் இணைந்து முக்கிய பொறுப்பை ஏற்பார் என்றும், அவர்தான் இனி நேரடியாக விஜயுடன் நிர்வாகம் சார்ந்த முடிவுகளை ரிப்போர்ட் செய்வார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயுடன், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், அதிமுகவை தொடங்கியதில் இருந்து அக்கட்சியின் எம்எல்ஏ-வாக இருந்த செங்கோட்டையன், அண்மையில் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் திமுக அல்லது தவெகவில் இணைய இருப்பதாக தகவல்கள் பரவி வந்தன.

தவெக தலைவர் விஜய்

இந்நிலையில்,சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தவெக தலைவர் விஜயின் வீட்டிற்கு, செங்கோட்டையன் சென்றார். சுமார் 2 மணி நேரம் விஜயுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளான என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் இருந்ததாக கூறப்படுகிறது. தமது அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துள்ள செங்கோட்டையன், விஜய் முன்னிலையில் தவெகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 கட்டமாக ஆலோசனை..

தவெக தலைவர் விஜயுடன், செங்கோட்டையன் இரண்டு கட்டமாக ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. முதற்கட்ட ஆலோசனையில் விஜய், செங்கோட்டையன், ஜான்ஆரோக்கியசாமி, ஆனந்த், ஆதவ்அர்ஜுனா ஆகியோர் இருந்ததாகவும், இரண்டாம் கட்டமாக விஜய், செங்கோட்டையன் மற்றும் ஜான்ஆரோக்கியசாமி மட்டும் ஆலோசனை நடத்தியதாகவும் தெரிகிறது.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

செங்கோட்டையனுக்கு நிர்வாக குழுவை வழி நடத்தும் ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும், செங்கோட்டையன் நேரடியாக விஜய்க்கு ரிப்போர்ட் செய்வார் என ஆலோசனையில் முடிவெடுக்கப்படதாகவும் கூறப்படுகிறது.