தமிழ்நாட்டில் அறுவைசிகிச்சை மூலம் நடக்கும் பிரசவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது. மாநிலத்தில் கடந்த 2021-22ஆம் ஆண்டு மொத்தமாக ஒன்பது லட்சத்து 11 ஆயிரம் பிரசவங்கள் நடந்த நிலையில், இதில் நான்கு லட்சத்து 32 ஆயிரம் பிரசவங்கள் அறுவை சிகிச்சை மூலம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-23இல், ஒன்பது லட்சத்து 12 ஆயிரம் பிரசவங்கள் நடந்த நிலையில், இதில் நான்கு லட்சத்து 40 ஆயிரம் பிரசவங்கள் அறுவை சிகிச்சை மூலம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. 2023-24இல், மொத்தம் நடந்த எட்டு லட்சத்து 71 ஆயிரம் பிரசவங்களில், நான்கு லட்சத்து 32 ஆயிரம் பிரசவங்கள் அறுவை சிகிச்சை மூலம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், 2024- 25இல் நடந்த எட்டு லட்சத்து ஆயிரம் பிரசவங்களில் நான்கு லட்சத்து 10 ஆயிரம் பிரசவங்கள், அறுவை சிகிச்சை மூலம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. 2021-22இல் அறுவை சிகிச்சை மூலம் நடந்த பிரசவங்களின் விகிதம் 47.4 சதவீதமாக இருந்த நிலையில், 2024-25இல் 51.25 சதவீதமாக உயர்ந்துள்ளது. பெண்களின் உடல் எடை அதிகரிப்பு, கருவில் உள்ள குழந்தையின் சீரற்ற இதயத்துடிப்பு, சர்க்கரை நோய், தைராய்டு, ரத்தசோகை, ரத்த அழுத்தம், பிற இணை நோய்களால் கர்ப்பிணிகள் பாதிக்கப்படுவது ஆகியவையே, இதற்கான காரணமாக பார்க்கப்படுகிறது.