செய்தியாளர்: அச்சுதராஜகோபால்
பெரம்பலூரில் பல்வேறு பகுதிகளில் விசிக நிர்வாகிகள் இல்ல நிகழ்ச்சிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசிய போது...
கெட்டிக்காரத்தனமாக அனைத்து துறைக்கும் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு:
இந்திய ஒன்றிய அரசு நிதி ஒதுக்காத சூழலில் தமிழக அரசு கெட்டிக்காரத்தனமாக அனைத்து துறைக்கும் பட்ஜெட்டை ஒதுக்கீடு செய்துள்ளது., ஒன்றிய அரசு கல்விக்கென ஒதுக்கிய நிதியில் முக்கால் பங்கை தமிழக அரசு மாநிலத்திற்கென ஒதுக்கியுள்ளது போற்றுதலுக்குரியது. அரசுக்கு அவபெயரை ஏற்படுத்த முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் பட்ஜெட்டை ஓடாத வண்டி என விமர்சித்துள்ளார்.
டாஸ்மாக் ஊழல் குறித்து விஜயின் கருத்துக்கு திருமாவளவன் பதில்:
டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. ஆனால், ஆயிரம் கோடி வெறும் கையளவு நீர் தான் என தவெக தலைவர் விஜய் விமர்சனம் செய்துள்ளார். டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை உள்நோக்கத்தோடு செயல்படும் பட்சத்தில் அதன்மீது வழக்கு தொடர உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம்.
மும்மொழிக் கொள்கையில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கும் தமிழகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை, அவர், பாஜக கூட்டணியில் பதவியை தக்கவைக்க கூறி வருகிறார். பவன் கல்யாணின் கருத்துகளை தமிழகத்தில் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை என்று திருமாவளவன் தெரிவித்தார்.