செங்கோட்டையன் குறித்து துருவித் துருவி கேள்வி கேட்டாலும் கருத்து சொல்ல முடியாது – ஜெயக்குமார்
செய்தியாளர்: இஸ்மாயில்
காஞ்சிபுரத்தில் அதிமுக நிர்வாகியின் இல்ல திருமணவிழா நடைபெற்றது இதில், கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாார். முணமக்களை வாழத்தினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசிய போது....
அதிமுகவில் யார் பெரியவர் யார் சிறியவர் என்ற ஈகோ இல்லை. திமுக போன்று குடும்ப ஆதிக்கம் நிறைந்த கட்சி இல்லை அதிமுக டெல்லி மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்கள் மதுபான முறைகேட்டில் ஆட்சியை இழந்தது போல், தமிழ்நாட்டில் 2026 ஆண்டு திமுக ஆட்சியை இழக்கும் என்றார்.
செங்கோட்டையன் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி அதற்கான பதிலை அளித்துவிட்டார். அவரைப் பற்றி துருவித் துருவி கேள்வி கேட்டாலும் அவர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் ஆகியால் கருத்து சொல்ல முடியாது.
திமுகவின் கடைசி பட்ஜெட் இது, பட்ஜெட்டில் ஒன்னும் இல்லை, ஆனால், யாரும் அதைப் பற்றி பேசுவதில்லை. அதிமுக பற்றி என்னதான் கேள்வி கேட்டாலும் அதிமுக உடைக்க முடியாத மாபெரும் இயக்கம், எஃகு போன்றது என்ன சதி, சூழ்ச்சி செய்தாலும் தொண்டர்களே அதனை முறியடித்து விடுவார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.