வழக்கறிஞர் வில்சன் pt
தமிழ்நாடு

"பல்கலைகழக வேந்தர் பதவியில் இருந்து ஆளுநர் நீக்கம்" - தீர்ப்பு குறித்து வழக்கறிஞர் வில்சன் விளக்கம்

” குடியரசுத் தலைவருக்கு மசோதாவை அனுப்புவது தொடர்பாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ” - வழக்கறிஞர் வில்சன்

ஜெனிட்டா ரோஸ்லின்

உச்சநீதிமன்றம் கூறியது என்ன என்பது குறித்து விளக்குகிறார் வழக்கறிஞர் வில்சன் .

அதில், " மீண்டும் அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒரு மாதத்தில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என தீர்ப்பு. பேரவையில் நிறைவேற்றும் மசோதக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் காலம் தாழ்த்தக்கூடாது.

பல்கலைகழக வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்கும் மசோதாக்கள் நிலுவையில் இருந்தன. மசோதாக்களுக்கும் உச்ச நீதிமன்றமே ஒப்புதல் அளித்துவிட்டது. குடியரசுத் தலைவருக்கு மசோதாவை அனுப்புவது தொடர்பாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. வேந்தர் பதவியில் இனி ஆளுநர் இல்லை. முழு அதிகாரம் மாநில அரசுக்கு." என்று தெரிவித்துள்ளார்.

ஒப்புதல் அளிக்கப்பட்ட 10 மசோதாக்கள் என்னென்ன?