பயிற்சி வகுப்புகள் முகநூல்
தமிழ்நாடு

திருமண புகைப்படம், வீடியோ எடிட்டிங்... தமிழ்நாடு அரசு சார்பாக பயிற்சி வகுப்புகள்!

திருமண புகைப்படம், வீடியோ எடிட்டிங்க், பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வகுப்புகள் தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பாக அளிக்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பாக திருமண புகைப்படம், வீடியோ எடிட்டிங்க், பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக அரசின், தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி, வரும் 26 முதல் 28ம் தேதி வரை, காலை 10:00 மணி முதல் மூன்று நாட்களுக்கு இந்த பயிற்சி கொடுக்கப்பட உள்ளது. இதேப்போல, திருமணம் புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங்க் பயிற்சியிலும் 10 நாட்களுக்கு நடத்தப்பட்டுள்ளது

சென்னை ஈக்காட்டு தாங்கலில் உள்ள தமிழக தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில்தான் இந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது. வருகின்ற மார்ச் 25 - முதல் ஏப்ரல் 4 வரை 10 நாட்களுக்கு வழங்கப்படும் இந்த பயிற்சி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற இருக்கிறது.

புகைப்படம் எடுப்பதன் அடிப்படை, ஒளியமைப்பு, கலவை மற்றும் நுட்பங்கள், பாரம்பரிய புகைப்படம் எடுத்தல், திருமண போட்டோ எடுக்கும் நுட்பங்கள், ஆல்பம் வடிவமைப்பு உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகிறது

கல்வி தகுதி:

குறைந்தபட்ச கல்வி தகுதி 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது:18

வயது நிரம்பியவர்கள் , ஆர்வம் உள்ளவர்கள் இதில் விண்ணப்பிக்கலாம்.

இதில் பங்கேற்க விரும்புவர்களுக்கு குறைந்த வாடகையில் தங்கும் வசதி செய்து தரப்படும்.

மேலும் விவரங்களை அறிய:

www.editn.in இணையதளம், 86681 08141, 86681 02600 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.