செய்தியாளர்: காமராஜ்
விழுப்புரம் அருகேயுள்ள நன்னாடு கிராமத்தைச் சேர்ந்தவர் அனுஷ்கா. இவர் அதே ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் வீட்டிற்கு வெளியே உள்ள பஞ்சாயத்துக்குச் சொந்தமான குடிநீர் நீர் தேக்க மினி டேங்க்கில் தண்ணீர் பிடிப்பதற்காக மின்மோட்டாரை போட்டுள்ளார் அப்பொழுது திடீரென மாணவி மீது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்துள்ளார்.
இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் மாணவியை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து கானை போலீசார் விசாரனை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.