தமிழ்நாடு

67 பழங்குடியினருக்கு பட்டா - விழுப்புரம் ஆட்சியர் உத்தரவு

67 பழங்குடியினருக்கு பட்டா - விழுப்புரம் ஆட்சியர் உத்தரவு

webteam
பழங்குடியினர் குடியிருப்பில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன், 67 குடியிருப்புகளுக்கு உடனடியாக பட்டா வழங்க உத்தரவிட்டார்.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மழை தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மோகன், இருளர் பழங்குடியினர் வசிக்கும் மயிலம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் மயிலம் பகுதி மட்டுமல்லாமல் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் அனைத்து இருளர் மற்றும் நரிக்குறவர்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட்டார். 67 குடும்பங்களுக்கு பட்டா வழங்குவதோடு அவர்களுக்கு உடனடியாக ஆதார் அட்டை, சாதிச் சான்றிதழ் மற்றும் வங்கி கணக்கு போன்றவற்றை வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் அங்கிருந்த இருளர் பெண்களிடம் தன்னுடைய தொலைபேசி எண்ணை வழங்கி உதவியோ புகாரோ தெரிவிக்க விரும்பினால் தன்னை தொடர்பு கொள்ளுமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
சமூக வலைத்தளங்களில் வந்த ஒரு காணொலியைப் பார்த்த ஆட்சியர், அதிகாலையிலேயே புறப்பட்டு அந்த பகுதிக்குச் சென்றார். பிறகு அவர்களுக்கு அனைத்து அரசு நலத்திட்ட உதவிகளையும் தருவதாக வாக்குறுதி அளித்ததுடன் அதற்கான உத்தரவைப் பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

- ஜோதி நரசிம்மன்